ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த குறிப்பு.
அன்புள்ள புல்புல் - கட்டுரை தொகுப்பு - யாவரும் பதிப்பகம் - முதல் பதிப்பு - ஜூலை 2018 - பக்கங்கள் -196
காந்தி ஒரு பதவன்
முதலில் இந்த கட்டுரை தொகுப்பை எழுதிய தோழர் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கரணம் இதில் அவர் காந்தி சொல்லிய விதம் எனக்கு சற்று புதுமையாக இருந்தது காரணம் காந்தியை ஒரு புனிதராகவோ ( அவர் கொள்கைகளை தவிர்த்து ) அல்லது துரோகியாகவோ சித்தரிக்கும் மனப்பான்மை தான் நமக்கு இருகிறது தவிர ஏன் அவர் ஒரு சக மனிதராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று கேள்வி இந்த புத்தகம் மூலம் யோசிக்கமுடிகிறது. காரணம் my life is my message என்று சொன்னவர் சொன்னது மட்டும் இல்லாமல் தனது வாழ்க்கையை ஒரு சோதனை களமாக தான் பார்க்கிறார் அதில் வெற்றி பெற்றாலும் இல்லை தோல்வி அடைந்தாலும் அதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு அடுத்த கட்டம் நோக்கி செல்கிறார் . ரெண்டாவது ஒரு பத்து ஆண்டுக்கு முன்பு கல்லுரி படிக்கும் காலகட்டத்தில் அதுவும் Facebook அப்போது அறிமுகம் ஆன காலத்தில் காந்தி மீது வந்த விமர்சனங்கள் அதிகம் அதில் உண்மை தன்மை என்ன என்பது கூட தெரியாமல் அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்த காலம் அந்த நேரத்தில் தான் ஆசிரியர் அவர்களும் காந்தியை பற்றி படித்து தெரிந்து கொண்டு எழுத ஆரம்பித்து இருக்கிறார் அதுவும் இந்த புத்தகம் பிடிக்க ஒரு காரணம் .
புத்தகம் பற்றி :
இந்த கட்டுரை தொகுதி மொத்தம் 18 தலைப்புகள் உள்ளது முதல் இரண்டு தலைப்பு என்பது காந்தி அவர்களின் கல்வி பற்றிய பார்வை காந்தி எந்த மாதிரியான கல்வியை வலியுறுத்தியுள்ளார் அதன் காரணம் பற்றியும் சொல்லி உள்ளார்.
2) அடுத்த இரண்டும் காந்தியின் மதம் சம்பந்தமான பார்வையை முன்வைக்கிறது குறிப்பாக ராமராஜ்ஜியம் என்றால் என்ன அவர் ஹிந்து மத பற்று மட்டும் தான் உள்ளவரா என்பது போன்ற செய்திகள் இந்த
கட்டுரை வழி தெரிந்து கொள்ள முடிகிறது.
3) அடுத்த ஐந்து கட்டுரை சர்வாதிகாரம் , அஹிம்சை , மற்றும் காந்தி முன்பு நடந்த ஒத்துழையாமை போராட்டம் குறித்த தகவல்கள் உள்ளன.
4) அடுத்த 10 வது கட்டுரை comrade காந்தி எனப்து காந்தியும் கம்யூனிசம் சிந்தனை குறித்த தகவல்கள் தான் உண்மையில் காந்தியின் நோக்கமும் கம்யூனிசம நோக்கமும் சற்று ஒரே மாதிரி தெரிந்தாலும் இரண்டும் வேறு வேறு தன்மை உள்ளது தான் என்பதை இந்த கட்டுரை சொல்கிறது
5) அடுத்த நான்கு கட்டுரை காந்தியின் வெற்றி , செயல்பாடு , விமர்சனம் ஆகிவற்றை சொல்வது குறிப்பாக காந்தியும் பகத்தும் என்று கட்டுரை காந்தி, பகத் சிங்க்கு உதவவில்லை என்ற கருத்து இருக்கிறது அதை பற்றி செய்திகள் இதில் வருகிறது .
6) அது போல காந்தியும் 55 கோடி கட்டுரையும் ஒரு விமர்சன பார்வை தான் அதில் எந்த அளவு உண்மை என்பது இந்த கட்டுரை சொல்லி உள்ளது
7) கடைசியாக அன்புள்ள புல்புல் இதில் காந்தியின் நகைச்சுவை பற்றி சொல்லி இருக்கிறார்கள் குறிப்பாக அவர் புல்புல் என்று யாரை சொல்லி இருக்கிறார் அது போல தன்னை அவர் எப்படி சுயபகடி செய்து கொண்டார் என்ற தகவல்கள் இதில் உள்ளது.
கடைசி இரண்டு வின்சென்ட் ஷீன் , மற்றும் தரம்பாள் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் காந்தி பற்றி சொல்லியதை இங்கு கட்டுரையாக சொல்லி உள்ளார்.
இந்த கட்டுரை தொகுப்பை பொறுத்த வரை ஒரு ஒரு மனிதருக்கும் ஒரு பார்வை இருக்கும் காந்தியை பற்றி அதனால் என்னுடைய பார்வையை மற்றவர் மீது திணிக்க முடியாது . ஆனால் என்னை பொறுத்த வரை காந்தி ஒரு பதவர் (வழிகாட்டி ) தான் . காரணம் அவர் தன் வாழ்க்கையை சோதனை கலமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது அவரை படிக்கும் போது தெரிகிறது.
No comments:
Post a Comment