கொஞ்ச காலம் ஆகிவிட்டது இங்கு எழுதி .இங்கு எழுதுவதில்லையே தவிர இணையத்தில் பிழைப்பு ஓடிக்கொண்டுதான இருக்கிறது .நண்பர்களுடன் இனைந்து அண்ணா ஹசாறேவுக்காக ஒரு வலைப்பூ தொடங்கி இப்பொழுது அது காந்தி ,காந்தியர் ,காந்தியம் குறித்து தமிழில் தொகுக்கும் தளமாக வளர்ந்துவிட்டது .அதில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் .அண்மையில் அங்கு சில கட்டுரைகள் தொடர்ந்து மொழிமாற்றம் செய்து வருகிறேன் .
எனது பிரச்சனை இயங்குவது தான், சட்டென்று வாழ்வின் பொருள் பற்றிய கேள்விகள் எழுந்து பொறுமையின்மையை ஏற்படுத்தும், பின்னர் ஒருவித வெறுமையும் சோர்வும் படரும் . இலக்கியங்களும் , தத்துவங்களும் கொடுக்காத ஒன்றை இந்த பொக்கை வாய் கிழவர் எனக்கு கொடுக்கிறார் , ஆம் காந்தியை வாசிக்க வாசிக்க அபார செயலூக்கம் கிடைக்கிறது ,இயங்கிக்கொண்டே இருக்க முடிகிறது , அடுத்து என்னவென்று ஆர்வம் தலைகேருகிறது . கடலில் தத்தளித்து அமிழ்ந்து விடுவேனோ என்று பயந்து இருந்தேன் ,இப்பொழுது எனக்கு மிதந்து கரை சேர காந்தி எனும் கட்டுமரம் கிடைத்துவிட்டது .
காந்தியின் ஒவ்வொரு நுட்பங்களை ஆழமாக வாசித்து புரிந்துகொள்ள முயல்கிறேன் .சில விஷயங்களை செயல் தளத்தில் பரிசோதனை முயற்சிகளாக முயன்று பார்க்கிறேன் . அபார மன நிறைவு வருகிறது .வரலாறு ஒரு மிகப்பெரிய வல்லமை ,அது மின்சாரம் போல நம் கண்களுக்கு புலப்படுவதில்லை ஆனால் அது இயங்குவதை நாம் உணர முடிகிறது .அந்த மாபெரும் வரலாறு நம் வழியாக தன்னை நிகழ்த்திகொள்கிறது எனும் ப்ரங்ஞை பலருக்கும் இருப்பதில்லை , ஆனால் காந்தி அளவிற்கு யாருக்கும் அந்த ப்ரங்ஞை இருந்ததாக எனக்கு தெரியவில்லை .காந்தியை முழுவதும் புரிந்துகொண்டால் தான் அவரை எப்படி தாண்டி அடுத்தகட்ட நகர்வுக்கு நாம் செல்ல முடியும் ,இப்பொழுது எனது ஆசை அது தான் ,காந்தியோடு நான் நின்றுவிட விரும்பவில்லை,அவரது அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்பதிலே எனக்கு ஆவல் .
காந்தி தளத்தில் எழுதியுள்ள சில கட்டுரைகளின் சுட்டிகளை இங்கு அளிக்கிறேன் நேரம் இருந்தால் படித்துபாருங்கள் .
மோகன்தாஸ் to மகாத்மா
ராலேகான் சித்தி - ஒரு ஆய்வு நோக்கு
என்றும் அன்புடன்
சுனில்