திரட்டி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது ,யதார்த்தமாக தமிழ்வெளி எனும் திரட்டியை காண நேர்ந்தது ,பின்பு தமிழ் மனம் ,அப்புறம் இன்ட்லி .நான் எனது வலைப்பூவை இணைத்த திரட்டிகள் இவை மட்டுமே .இதற்க்கு மேல் செய்ய சோம்பல் .இதுவே போதுமானதாகவும் பட்டது .
வலைப்பூவை தங்களது நேரத்தை செலவிட்டு வாசித்து செல்லும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை இங்கிருந்து கற்றுக்கொண்டு அல்லது பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்,நானே எனது பதிவுகளை ஏதாவதொரு காலத்தில் வாசிக்க நேரும் பொழுது ஏதும் சமரசங்கள் செய்துகொள்ளாத நேர்மையான எழுத்துக்களாக இருக்க வேண்டும் .இந்த இரு கோட்பாடுகளை மனதில் கொண்டு எழுதிவருகிறேன் ,ஓரளவுக்கு இதை மீறவும் இல்லை என்றே படுகிறது .(நீங்க தான் சொல்லணும் ).முடிந்தவரை வலையுலக அரசியல் (?) மற்றும் குழுமங்களில் (நம்மள யாரும் கூப்டா தானே !!)இணையாமல் ஆறேழு மாதங்கள் ஒட்டிவிட்டேன் .இப்படியே கடந்துவிட வேண்டும் என்பது என் எண்ணம் .
இந்த வலைப்பூவை பின்தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ,குறிப்பாக பின்னூட்டங்கள் மூலம் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றி .வலையுலகத்தில் கால பதித்த காலங்களில் அனேக பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு கொண்டிருந்தேன் ,இப்பொழுதெல்லாம் அதற்கு நேரம் கிடைப்பதில்லை .(நான் வளர்கிறேன் மம்மி !!) இனி கொஞ்சம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வாசித்து பின்னூட்டம் இட யத்தனித்து உள்ளேன்
இதை தவிர ,எனது எல்லா பதிவுகளையும் படித்து அதற்கு கருத்துக்களை என்னிடம் தொலைபேசியில் சொல்லும் என் நண்பர்களுக்கு ,பதிவுகளை எப்பயாவது எட்டி பார்க்கும் முகநூல் நண்பர்களுக்கும் நன்றி .
வலையுலகத்தில் பெரிதாக நண்பர்கள் என்று யாரையும் கண்டடையவில்லை -எனினும் ஒத்த மனமுடைய சிலரை கண்டுகொண்டது மகிழ்ச்சி .மனதிற்கு திருப்தி அளிக்காத பதிவுகள் இதில் சில இருக்கிறது ,தமிழ் மன பரிந்துரை எனும் பதிவு- இதை எழுதி இருக்க கூடாது என்று இப்பொழுது மனம் சொல்லுகிறது .இலங்கை ராணுவம்- இந்திய மீனவர்கள் பிரச்சனையில் எழுதிய ஒரு பதிவு -கவிதை மாதிரி முயன்று மிகவும் மொக்கையாக முடிந்தது ,இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது .அதே போல் ஆரம்பத்தில் எழுதிய முதல் மூன்று இடுகைகள் -வணக்கம் ,சிவன் ,தலைவன் இதெல்லாம் ஒரே இடுகையில் முடித்து இருக்கலாம் தேவை இல்லாமல் மூன்று இடுகைகளை ஆர்வகோளாரில் வீணடித்து தொலைந்தேன் .இந்த பதிவும் கூட தேவையா என்று யோசித்தேன் ,ஆனால் நான் நன்றி சொல்ல எனக்கு காரணம் இருப்பதால் இதை பதிகிறேன்
சிறுகதை முயற்சிகள் -ஐந்து கதை முயன்றுள்ளேன் ,இனியும் அந்த தொல்லை தொடரும் :) ஆயுர்வேதம் பற்றிய தொடர் அதுவும் தொடர்ந்து வரும் .இதை தவிர சில பதிவுகள் பாதியோடு நிற்கின்றன -பிள்ளை வளர்ப்பு தொடர்பாக மூன்று தொகுதிகள் வரை எழுதி உள்ள பெற்றால் மட்டும் போதுமா ,கடவுளும் மனிதனும் ,எனக்கு தெரிந்த கடவுள்கள் போன்றவை .இதை எல்லாம் எப்பொழுது முடிப்பேன் என்று எனக்கே தெரியவில்லை .புத்தக அறிமுகங்கள் இனியும் தொடரும் .வேறு சில முக்கியமான பதிவுகள் எழுதும் எண்ணம் உண்டு .சரக்கு தீரும் பிரச்சனை இப்போதைக்கு இல்லை .எழுத வேண்டும் எனும் எண்ணம் என்னை உந்தி தள்ளினால் ஒழிய எழுதுவது இல்லை என்றும் முடிவு செய்து இருந்தேன் .
வாசித்து வரும் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் -என்னென்ன குறைகள் இருக்கிறது என்று ,முடிந்த வரை திருத்திக்கொள்ள முயல்கிறேன் .
தமிழ் வலையுலகம் எனக்கு கொடுத்தது எக்கச்சக்கம் .அன்றாடம் ஏதோ ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன் .மாற்றுதரப்புகள், பின்னூட்டங்கள், பார்வைகள், எண்ணங்கள் ,படைப்பூக்கம் நிறைந்த படைப்புகள் இவை எல்லாம் அன்றாடம் என்னை புதிதாக சிந்திக்கவைத்த வண்ணம் உள்ளது .மனம் விரிவடைகிறது .என்னை பொறுத்தவரை ஒரு பதிவுகூட மொக்கை என்றோ வீண் என்றோ சொல்லிவிட முடியாது ,அந்தந்த பதிவுக்கான தேவை எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது அது யாருக்கோ பயனளிக்கவும் செய்கிறது இதுவே உண்மை .
தங்களது நேரத்தை செலவிட்டு எளிய அரசியல் ,சச்சரவுகளை கடந்து,வெறுப்பு-காழ்ப்புகளை உமிழாது தூய நோக்கத்தோடு செயல்படும் அனைத்து சகபதிவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வந்தனங்கள் .
இலவசமாக வலைப்பூ வழங்கி ,அதில் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியும் அளித்த கூகிளாண்டவருக்கு நன்றி .:)
எனது பதிவுகளோ ,கருத்துகளோ யாரையும் இம்மியளவு மனம் வருந்த செய்து இருந்தாலும் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கோருகிறேன் .
தனித்தனியாக பல பதிவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் .அதை அவர்களுக்கு தனியே தெரிவிப்பதே சிறந்தது என்பதினால் அதை இங்கு செய்யவில்லை ,
மேலும் இதுகாறும் தாங்கள் அளித்துவந்த நட்பும் அன்பும் இனியும் தொடரும் என்று நம்பிக்கையுடன்
என்றும் அன்புடன்
டாக்டர்.சுனில் கிருஷ்ணன்
குறிப்பு-சற்றே சுய சொரிதல் கூட இருப்பது போல் உள்ளது -பொறுத்துக்குங்க :) எப்பயாவது ஒரு வாட்டி இப்படி சொரிஞ்சுகரதுனால மன்னிச்சுக்குங்க :)
ஐம்பதிற்கு வாழ்த்துக்கள் டாக்டர். ஐம்பதிலும் ஆசை வளரும்.. ;-)
ReplyDeleteவலைப்பூவை தங்களது நேரத்தை செலவிட்டு வாசித்து செல்லும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை இங்கிருந்து கற்றுக்கொண்டு அல்லது பெற்றுக்கொண்டு செல்லவேண்டும் - நல்ல எண்ணம். சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....இதையும் படிங்க..
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_23.html
உங்களை follow பன்ன ஆரம்பித்துவிட்டேன்..
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆர் வீ எஸ் ,கருண்
ReplyDeleteவாழ்த்துக்கள். எல்லா பதிவர்களும் ஆரம்ப நாட்களில் ஒரே மாதிரியான அனுபவத்தையே பெறுகிறார்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களே :-)
ReplyDeleteஐம்பதாவது பதிவுக்காக வாழ்த்துக்கள்!
ReplyDeleteமென்மேலும் பல பதிவுகளில், உங்கள் எண்ண அலைகளை எங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்!
உங்கள் படைப்புகளுக்கு, நீங்களே விமர்சனம் செய்து இருப்பது, அருமை.
இந்த மனப்பக்குவம், மேலும் சிறந்த படைப்புகளைத் தர அச்சாரம் இடும்.
தொடருங்க, சுனில். சரியான வழியிலதான் போயிட்டு இருக்கு :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteமேலும் உங்கள் பதிவுகளை வாசிக்க காத்து இருக்கிறோம்
சித்ரா மேடம் -உங்களுக்கு நிச்சயமாக எனது சிறப்பு நன்றிகள் உண்டு ,இந்த ஐம்பது பதிவுகளில் நீங்கள் பின்னூட்டம் இடாத பதிவு ஐந்து கூட இருக்காது ,என்னத்த எழுதி என்று எண்ணும் பொழுது உங்கள் பின்னூட்டம் எனக்கு பேருதவியாக இருந்தது என்பதே உண்மை
ReplyDeleteநன்றி முத்துலெட்சுமி மேடம் -நீங்கள்தான் முதன் முதம் எழுத்து பிழைகளை சுட்டி காட்டினீர்கள் -உங்களுக்கு நினைவு இருக்கிறதா என்று தெரியவில்லை ,இப்பொழுதெல்லாம் கொஞ்சம் பரவாயில்லை என்றே நம்புகிறேன் :)
ReplyDeleteதமிழ் உதயம் ரமேஷ் -உங்கள் பதிவை வாசிக்கும் பொழுதெல்லாம் எனக்கு நெறைய மற்றும் பெரிய பின்னூட்டம் இட தோன்றும் ,நல்ல சிந்தனை வளம் ,நம்மை தூண்டி விவாததிற்கு அழைக்கும் சிக்கல்களை அழகாக கையாள்வீர்கள் -ஒரு பதிவு கூட எனக்கு பயணில்லாமல் ஆனதில்லை ,நன்றி ரமேஷ்
ReplyDeleteவாங்க திருமதி கிருஷ்ணன் -என்ன கொஞ்ச நாளா ஏரியா பக்கமே காணும் ? வாழ்த்துக்கு நன்றிங்க
ReplyDeleteமுதல வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராம்ஜி சார் -ஆங்காங்கு உங்களை பல விவாதங்களில் பார்த்து இருக்கிறேன்
ReplyDeleteதெகா-நன்றி -உங்கள் பதிவுகள் எனக்கு கற்றுகொடுத்தவை மிக அதிகம் .பொருள்பதிந்த பின்னூட்டங்கள் இதுவும் உங்க ஸ்பெஷல் ,உங்கள் வலைப்பூவில் நீங்கள் சொன்ன ஒரு கருத்து என் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ளது ,எதாயவது எழுத வேண்டும் எனும் அவா உள்ளிரிந்து கொந்தளித்து வரவேண்டும் ,முயற்சிக்கிறேன் :)
Hai Sunil...
ReplyDeleteCongrats..Congrats....:)))
Keep Rocking...
வாழ்த்துக்கள் சுனில். தொடர்ந்து எழுதுங்க அளவோடு :-)
ReplyDeleteகிரியார் -நன்றி ,அவ்வபொழுது நீங்கள் வழங்கும் அறிவுரைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது ,நன்றி .
ReplyDeleteஆனந்தி மேடம் -நன்றி :)
நண்பா, இன்னும் எழுது நண்பா, என்னுடைய நண்பன் ஒரு நல்ல எழுத்தாளர் ஆவதற்கு ஒரு விதை விதைதுள்ளத்தை நினைத்தால் சந்தோஷமா இருக்கு. இன்னும் பல நல்ல செய்திகளை நீ சொல்வாய்
ReplyDeleteஎன்று நம்பிக்கையுடன் வாழ்த்தும் அன்பு நண்பன்.
அரைச் சதமா?
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்றுதான் தங்கள் பதிவுக்குள் வந்தேன்
ReplyDelete50 வது பதிவு நிச்சயம் சொரிதலாக இல்லை
நல்ல வழிகாட்டியாகத்தான் உள்ளது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்