Wednesday, December 29, 2010

பின்னோக்கி

இதோ 2010 தனது மிச்ச சொச்ச உயிரை இரண்டொரு நாளில் விடுத்து ,நிகழ்காலத்திலிருந்து வரலாறு பெட்டகத்தில் இறந்தகாலமாக நினைவுகளில் மட்டும் வாழ போகிறது .நிகழ்காலம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை இதோ என்று எண்ணுவதற்கு முன் அது கடந்து விடுகிறது .காலம் நம் வசதிக்காக நாம் உருவாக்கியது வருடம் ,நிமிடம் என எல்லாம் அப்படி தான்.புதிய மாற்றங்களை,புதிய சபதங்களை நாம் முன்மொழிய புத்தாண்டு ஒரு தினமாக இருக்கும் .மாற்றம் என்று முடிவாகிய பின் அதை அப்பொழுதே தொடங்க வேண்டும் ,இல்லையேல் அது நீர்த்துவிடும் என்று உணர்கிறேன் .ஆயினும் கூட இது ஒரு தொடக்கம் என்று எண்ணலாம்.ஒரு காலம் என்று ஒன்றை வரையறுத்து அதை பின்னோக்கி ஆராயும் பொழுது நிச்சயம் அது பெரும் சுகம் தரும் .
நாம் கடந்து வந்த உணர்வுபூர்வமான தருணங்கள்,நெகிழ்ச்சியான தருணங்கள் ,இதை எல்லாம் நாம் மனதில் மறு ஆக்கம் செய்து அந்த உணர்வுகளை மீள் எழுச்சி செய்தல் ஒரு பெரும் சுகம் .நாம் தவறிய இடங்கள் அப்பொழுது நமக்கு புரியாது ,உணர்வுகள் நமது நியாயத்தை மட்டும் பதிய செய்து புலன்களை கலங்கடிக்கும் .இப்பொழுது எண்ணி பார்த்தால் பிரச்சனையின் மறுப்பக்கத்தை புரிந்துக்கொள்ள முடியும் .நாம் அறியாத நமது இருட்டு பக்கங்கள் ,நாம் நம்மை வெறுத்த நமது கவனத்துக்காக எங்கும் நமது நிழல் அம்சங்களின் மீது சற்று ஒளியை பாய்ச்சினால் நம்மை நாம் இன்னும் ஒரு படி நெருங்கி விடுகிறோம் .

என்னை பொருத்தமட்டில் இந்த ஆண்டு கற்றவை ,பெற்றவை நிறைவாக உள்ளது .சமூக தளத்தில் யோசித்தால் என்னை மிகவும் வருத்தமாக்கிய நிகழ்வு என்றால் - பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக செய்த மதிப்பெண் பட்டியல் குளருபடி -இது ஒரு சமூகத்தின் ஆக பெரிய சீர்கேடாக நான் பார்க்கிறேன் ஊழல் என்பது அரசியல்வாதி ,அதிகாரி என்ற மையத்தை தாண்டி எப்படி வெகுஜன மார்கமாக மாறி ,ஒரு சராசரி மனிதன் சட்டத்தை தனது சுயநலத்துக்காக வளைக்கிறான் என்று உறைய வைத்தது .நியாயஸ்தன் ஒருவனுக்கும் மற்றவனுக்கும் உள்ள வேறுபாடு வாய்ப்பு மட்டுமோ என்று சந்தேகிக்க வைக்கிறது .யாரேனும் அரசின் ஊழலை பற்றி விமரிசித்தால் அவருக்கு அதில் பங்கு கிடைக்கவில்லை என்று ஆற்றாமையில் உழற்றுவது போல் இருக்கிறது .
ஆகபெரிய அவமானமாக நான் எண்ணுவது -சந்தேகமே இல்லாமல் எனது இயலாமையை தான் ,வருத்தபடுவதை ,கொபபடுவதை தவிர என்னால் ஏன் ஏதும் செய்ய இயலவில்லை என்று அவமானமாக இருக்கிறது .வரும் காலத்தில் இன்னும் சற்று கூடுதல் நேர்மையோடு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது .பொது தளத்தில் யோசித்தால் - கல்மாடி இந்தியர்களின் மொத்த மானத்தையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார் .ஆனாலும் அமெரிக்காவின் மானம் விக்கி லீக்ஸ் -புண்ணியவான் அசெஞ் அவர்களினால் நன்றாக உலகமெங்கும் சந்தி சிரித்தது.இது அப்துல் கலாமின் கனவான (மற்றும் கேப்டனின் ) இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது .இந்த மாறி கொடுமை எல்லாம் செஞ்சு என்னத்த வல்லரசாக வேண்டும் ? ஏற்கனவே இந்தியா இலங்கை தமிழர்களுக்கு புறமுதுகு காண்பித்து வல்லரசு ராஜப்பாட்டையில் கால்பதித்து விட்டது .இதை ஊர்ஜித படுத்து விதமாக சொந்த மக்களுக்கு சூனியம் வைக்கும் தண்டகாரண்யா பிரச்சனை -நினைத்தாலே இப்பவே கண்ண கட்டுதே.வல்லரசெல்லாம் வேண்டாம் சாமீ ,நல்லரசாக இருந்தால் போதும் .
நெகிழ்ச்சியான தருணம் என்று பார்த்தால் எங்கள் நண்பன் மணியின் பெயரால் உருவான அறக்கட்டளை சார்பாக ஒரு ஏழு குழந்தைகளின் கல்வி செலவை நண்பர்கள் இனைந்து ஏற்றது .பின்பு அவனது நினைவு நாளில் அவனது கிராமத்திற்கே சென்று மருத்துவ முகாம் நடத்தியது,உணவு அளித்தது .சிறிய மன பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழாம் வகுப்பு மாணவிக்கு கொஞ்சம் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தேன் ,அவள் திரும்பி வந்து அவளது பரிச்சை ரேங்க் கார்ட் கொண்டுவந்து தனது வகுப்பில் தான் முதலிடம் என்று கூறினால் -அப்பொழுது உண்மையிலயே எனக்கு தோன்றியது இது தான் "தன மகனை சான்றோன் என கேட்ட தாய் " .இதே போல் இன்னும் இரண்டு மூன்று மாணவர்களுக்கு ஆலோசனை பலனளித்து அவர்களின் பெற்றோர்கள் தொலைபேசியில் அதற்க்கு நன்றி தெரிவித்தது ,பல நேரங்களில் நாம் மருத்துவம் செய்யும் பொழுது அவருக்கு என்ன ஆனது இவருக்கு என்ன ஆனது என்று எண்ணி கவலை கொள்வேன் ,சிலர் தொலைபேசியில் கூப்பிட்டு உடம்பு சு
கமா இருக்கு சார் என்று சொல்லும் பொழுது ,மனம் எங்கும் ஒரு பரவசம் பரவும் .எனது அம்மாவின் ஐம்பதாவது பிறந்தநாளை அவருக்கு தெரியாமல் நண்பர்களின் உதவி உடன் நடு இரவில் கேக் வெட்டி கொண்டாடியது .படித்த பள்ளிக்கே மீண்டும் நுழைவது சுகம் அதுவும் சிறப்பு விருந்தினராக செல்வது இன்னும் பரம சுகம் அதுவும் இந்த வருடம் எனக்கு வாய்த்தது
படித்து முடித்து ஒன்றரை வருடத்திற்கு பின் வாங்கிய மருத்துவ பட்டம் .நெருங்கிய நண்பர்களின் திருமணம் என்று நெறைய தருணங்கள்

மகிழ்ச்சியான தருணங்கள் என்று பார்த்தால் -நண்பர்களுடன் சதுரகிரி பயணம் ,நண்பர்களுடன் கொண்டாடிய தீபாவளி ,எந்திரன் முதல் நாள் காட்சி ,பார்த்த பல திரைப்படங்கள்,ப்ரெசிடென்ட் ஹோட்டலில் உண்ட இரவு உணவுகள் ,அக்காவிற்கு பிறந்த குழந்தை ,சச்சின் இருநூறு அடித்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி ,வருடத்தின் பிற்பாதியில் எனக்கு அறிமுகமான வலையுலகம் ,இப்பொழுதைக்கு -தமிழ்மண விருதுகளில் எனது மூன்று இடுகைகளும் அடுத்தகட்ட தேர்விற்கு சென்றுள்ளது ,இன்னும் பற்பல .பொது தளத்தில் யோசித்தால் -விளையாட்டு துறை மற்றும் பொழுது போக்கு துறையை தவிர்த்து வேறு எந்த துறையாலும் பெரிதும் மகிழ்ந்ததாக நினைவில்லை .
இந்த ஆண்டிற்கான சந்தேகம் -நான் என் மீது ஏதும் பிம்பம் எழுப்புகிறேனோ என்று ,எழுப்பாமல் இருக்க முயல்கிறேன் .கடவுளின் இருப்பை பற்றிய நம்பிக்கைகள் ,சந்தேகங்கள் வலுக்கிறது ,அதுவும் தமிழ் வலை உலகம் என்னை நெறைய சிந்திக்க வைத்துள்ளது .நெறைய இடங்களில் சிரிக்க வைத்தது .வாழ்க்கையை நாம் மட்டும் தான் தீர்மானிக்கிறோம் என்கின்ற எண்ணம் வலுவிழக்கிறது .ஒரு பெரும் கூட்டு முயற்ச்சியில் தன் பங்கை ஆற்றும் ஒரு துகள் என்று எண்ண தோன்றுகிறது .
ஆகபெரிய விழிப்பு -நிச்சயம் மக்களுக்கு சாமியார்களின் மேல் வந்துள்ள சந்தேக பார்வை என்று அடித்து சொல்லலாம் .என்னை பொறுத்த வரை எவர் ஒருவர் ஆன்மீகத்தை அமைப்பாக மாற்றுகிறாரோ அவருக்கு ஆன்மீகத்தை தாண்டி வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது என்று பொருள் .நித்தியை விட என்னை பாதித்த காணொளி கல்கி சாமியாருடயது .யோகத்தை பஞ்சு மிட்டாய் போல் இப்படி ஆளாளுக்கு விற்பது கொடுமை .
இன்னும் நெறையா எழுத வேண்டும் என்று தோன்றினாலும் ,பதிவின் நீ ..நீ ..நீளம் கருதி வேறு வழி இன்றி முடித்து கொள்கிறேன் ..
வரும் வருடம் நமக்கு தேர்தல் ஆண்டு -என்னென்ன தேவைகள் நமது அண்ணன்களை கேளுங்கள் ,பட்டியல் தயார் செஞ்சு வெச்சுக்கலாம் :)
நல்ல எண்ணங்கள் எல்லாம் உயிர் பெற்று ,வாழ்க்கை தரமும் நாம் வாழும் தரமும் ஒரு படியாவது உயர்ந்து ,மனங்களில் அமைதி குடி கொண்டு ,நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிரம்பி வழியும் ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் .நம்பிக்கையுடன் தொடங்குவோம் இந்த புத்தாண்டை .
தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
குறிப்பு -சற்றே சுய சொரிதல் அதிகமாக இருக்கிறதோ ? மன்னிச்சுக்கோங்க :)

6 comments:

  1. உங்களுக்கும் தான் நண்பரே புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. no சுயசொறிதல்...நியாயமான ஆதங்கம்...:))) happy new year:))))

    ReplyDelete
  3. கல்கி, நித்தி பற்றி ஓராயிரம் பதிவு எழுதலாம். ஆசாமியிடம் சாமியைத் தேடும் நம் மக்களின் புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும்.
    டாக்டர் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. ;-)

    ReplyDelete
  4. //எவர் ஒருவர் ஆன்மீகத்தை அமைப்பாக மாற்றுகிறாரோ அவருக்கு ஆன்மீகத்தை தாண்டி வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது என்று பொருள்//
    நிதர்சனமான உண்மை. ;-)

    ReplyDelete
  5. உங்களுக்கும், குடும்பத்தார்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் :-)

    ReplyDelete
  6. நன்றி ஆனந்தி மேடம் :) தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    இரவு வானம் -நன்றி ,புத்தாண்டு வாழ்த்துக்கள்
    ஆர் வீ எஸ் சார் - நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)
    ஆமாம் "அவர்கள் பல தொடர் கதைகள் ":)

    ReplyDelete