Wednesday, December 1, 2010

பெற்றால் மட்டும் போதுமா?-1

அண்மையில் பதிவர் கலகலப்ரியா ,தேகா ,மற்றும் பாலா அவர்கள் அவர்களுடைய பதிவுகளில் பிள்ளை வளர்ப்பு பற்றியும் ,அதன் அம்சங்களை பற்றியும் நல்ல விவாதங்களை தொடங்கி வைத்தனர் .அவர்களின் கருத்துக்கள் ,மற்றும் நவீன காலக்கட்டத்தில் இவ்வகை சிந்தனை போக்குகள் மிகவும் முக்கியமானவை .என் கருத்துக்களும் ,நான் சேகரித்த கருத்துக்களையும்,அனுபவங்களையும் இணைத்து ஒரு பதிவாக இடலாம் என்று இந்த முயற்ச்சியை தொடங்குகிறேன் .ஆகினும் கூட இது இன்னொரு தொடராக வருவது போல் நான் உணர்கிறேன் .இத்தகைய விவாதங்கள் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் .



அடிப்படையாக சில உளவியல் விஷயங்களின் தெளிவு நமக்கு முக்கியம்,அதிலிருந்து தொடங்குவோம் ." போர்ன் டு வின் " (born to win by muriel james and dorothy) எனும் தங்களது உளவியல் புத்தகத்தில் உளவியலாளர்கள் சில அற்புதமான அடிப்படைகளை நமக்கு அளிக்கின்றனர் ,அதை தொகுத்து நமக்கு நம்மை பற்றிய புரிதல் ஏற்ப்படுத்திக்கொள்ள இந்த சிறு முயற்ச்சி .நான் இத்துறை வல்லுநர் அல்ல என்றாலும் எனக்கு தெரிந்ததை கூற முயல்கிறேன்.
மரபு வழி குணங்களும் ,புறசூழலும் ஒரு தனிமனிதனின் குணாதிசயங்களையும் ,ஒரு சூழலுக்கு நாம் ஆற்றும் எதிர்வினையையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன,ஆயினும் கூட மனிதர்கள் இவைகளின் கருணையில் காலம் தள்ள அவசியம் இல்லை ,இதை நாம் நிச்சயம் நமக்கேற்ற வடிவில் மாற்றலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் .
மரபணு வழியாக வரும் குணங்களை பொறுத்த மட்டில் ,முக்கியமாக நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ,மரபணுக்கள் அப்படியே தந்தை ,தாய்களின் நோய்களை பிள்ளைகளுக்கு பரப்புவது இல்லை ,அந்த நோய் நம்மை எளிதில் ஆட்க்கொள்ளக்கூடிய தன்மையை (susceptiblity)மட்டுமே நமக்கு அளிக்கிறது,இது குணாதிசயங்கள் மற்றும் நடத்தைக்கும் கூட பொருந்தும் .அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் மகனுக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ,அதை அறிந்து நம் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை நாம் சீர்ப்படுத்திக்கொண்டாலே போதும் ,அந்நோயை தவிர்க்கலாம் .
மனிதர்களின் ஆளுமை மொத்தமாக மூன்று தளங்களில் செயல்படுகிறது என்று கூறலாம் .
பெற்றோர்கள் தளம்
குழந்தை தளம்
சராசரி மானுட தளம் (வளர்ந்த மனிதன் தளம்)
நாம் ஒவ்வொருவரும் இந்த மூன்று தளங்களில் மாறி மாறி பயணிக்கிறோம் ,ஒரு சில தளங்களில் நாம் அதிகமாகவும் வெளிப்படுகிறோம் .
இந்த தளங்களை புரிந்து கொள்ள ஒரு உதாரண சூழல் .
ஒரு மழை கால மாலை பொழுதில் தள்ளு வண்டியில் ஐஸ் கிரீம் உங்களை நோக்கி வருகிறது என்று நினைத்துகொள்ளுங்கள்
பெற்றோர் தளத்தின் சிந்தனை - இதை சாப்பிட கூடாது , சாபிட்டால் ஜுரம் வந்துடும்
குழந்தை - சூப்பர் !!! சாப்பிடனும் !!
சராசரி நிலை - இந்த மழை பொழுதில் நாம் சாப்பிட்டால் நாளை அலுவலகம் செல்வது கடினம் ,வேறு ஒரு முறை பார்க்கலாம் .
நம் வாழ்க்கையை முடிவு செய்யும் பலம் ஓரளவுக்கு நமக்கே இருக்கிறது என்பது உண்மை .ஆனாலும் நாம் மட்டுமே முடிவு செய்யும் வரம் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை என்பதும் உண்மை .

இந்த மூன்று தளங்களில் நாம் மாறி மாறி பயணிப்பது நமக்கு புரியும் .
பெற்றோர்கள் தளம்- இது நம் பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்று கொண்டது ,கண்டிப்பு தன்மை ,ஊக்க தன்மை ,முன் முடிவுகள் ,எச்சரிக்கை ,எதிலுமே ஒரு நம்பகமின்மை ஆகியவை இந்த தளத்தில் முக்கியமானது .நமக்குள் இருக்கும் ஒரு பெற்றோர் நமக்குள் இருக்கும் குழந்தையை போஷித்து பாதுகாக்கும் அமைப்பு இது .

குழந்தை தளம் -இது நாம் உணர்வுகள் சார்ந்து இயங்கும் தளம் ,இயற்கையான உந்துதல்கள் இதை வழி நடத்தி செல்கின்றன .சிரித்தல், மகிழ்தல் ,அடம் பிடித்தல் ,பிடிவாதம் இதெல்லாம் இந்த தளத்தின் வெளிப்பாடு .

சராசரி மானுட தளம் -ஒரு முதிர்ச்சியான மனம் கொண்ட ,சிந்திக்கும் தளம் , அறிவு ,அவதானிப்பு,சூழல் ,வாய்ப்புகள் என்று தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சூழலை எடை போடும் நிலை .பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வு , பகுத்தறிவு ஆகியவை இந்த தளத்தின் செயல்பாடே .

இந்த கட்டமைப்புகள் நம்முள் எப்பொழுது ?எப்படி வருகின்றன ?
முதலில் குழந்தை தளம் ,இந்த தள செயல்பாடுகள் தான் நமக்கு கைகூடும் .உணர்வுகளின் வாயிலாக ,தனது தேவைகள் வாயிலாக இது நடக்கிறது ,பின்னர் ஒன்றரை வயதினிலே பெற்றோர் தளம் உருவாகிவிடுகிறது ! இது பெற்றோர்களை (நடத்தையை)அவதானிப்பது மூலமும், தண்டனை -பரிசு (punish-reward) நடத்தைகள் மூலமும் ஒரு தளத்தை உருவாக்குகிறது ,பிற்பாடு கேள்விகள் மூலம் புரிதல் எட்ட முயலும் பொழுது மானுட அறிவு நிலையை எட்டுகிறது.முக்கியமான இன்னொரு விஷயம் ,இந்த தளங்களுக்கு வயது தடை இல்லை ,குழந்தைகள் பெரிய மனிதர்கள் போலவும், பெற்றோர்கள் போலவும் நடக்கும் ,பெரியவர்கள் -குழந்தை போலவும் ,பெற்றோர்கள் போலவும் நடப்பார்கள் .அதை தான் படங்கள் குறிக்கின்றன

ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு ஆழமான அடிப்படை புரிதலை எப்பொழுது எட்டுகிறது தெரியுமா ?

வளரும் ....
குறிப்பு -நான் உளவியலாளர் அல்ல .எனது துறை உளவியல் அல்ல .ஆயினும் கூட அந்த துறையில் அடிப்படை அறிவு கொஞ்சம் உண்டு ,மேலும் ஆர்வம் உண்டு அவ்வளவே.
.
பட உதவி-கூகிள்

11 comments:

  1. நல்ல ஆரம்பம். தொடருங்கள்.

    ReplyDelete
  2. நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது, டாக்டர்! தொடருங்க அவசியம். எப்பொழுதும் போலவே நன்றாக அலசி ஆராய்ஞ்சி போடுறீங்க.

    அடுத்தப் பகுதிய சீக்கிரம் கொடுங்க... நன்றி!

    ReplyDelete
  3. நன்கு விளக்கியிருக்கிறீர்கள். மனவியல் வகுப்புகளில் இதைப் பயிற்றுவிக்கும் போது லயிப்புடன் இந்த வகுப்பு எடுப்பேன்..
    நல்ல முயற்சி

    ReplyDelete
  4. நல்ல விரிவான விளக்கங்களுடன் பதிவு, பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிங்க.

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கும்மி அவர்களே

    ReplyDelete
  6. தெகா
    உங்களுக்கு தான் நன்றி சொல்லணும் ,இந்த விவாதங்களின் தொடக்க புள்ளியாக நான் பார்ப்பது உங்கள் பதிவை தான்.

    ReplyDelete
  7. மோகன்ஜி
    நீங்கள் மனவியல் துறை சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி ,நான் ஏதும் கோட்பாடு தவறுகள் செய்தால் சுட்டி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன் .ஆம் ,இந்த துறை பற்றிய படிப்பு மட்டும் நமக்கு சலிப்பே அளிப்பது இல்லை .

    ReplyDelete
  8. சித்ரா மேடம்
    தொடர் ஊக்கத்திற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  9. நல்லதொரு விசயத்தைப் பற்றி பகிர்கிறீர்கள்..
    வாசிக்கிறோம்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு. சிறப்பான எழுத்து நடை. நன்றி. இவ்ளோ பெரிய subjectயை எளிமையா சொல்லி இருப்பது அருமை

    ReplyDelete