புத்தகங்கள்

Pages

Friday, November 26, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -9-சிகிச்சை

நோய் என்பது சமநிலை குலைவு என்றால் அந்த சமநிலை குலைவை சீர் செய்ய நாம் எடுக்கும் அனைத்து முயர்ச்சிகளுமே சிகிச்சை எனலாம் .ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தங்கலான முக்குற்ற கோட்பாடு ,ஐம் பரு பொருட்கள் கோட்பாடு ஆகியவை முக்கியமானவை ,அதை பற்றி மற்றொரு சமயம் விரிவாக அலசலாம் .

நவீன மருத்துவம் சிகிச்சையை மூன்று தொகுதிகளாக பிரிக்கிறது .
1.முதற்கட்ட சிகிச்சை (primary intervention)
2 .இரண்டாம் கட்ட சிகிச்சை (secondary intervention)
3.சீரமைப்பு ,மறுவாழ்வு சிகிச்சை (rehabilitative measures)

இதை புரிந்த்க்கொள்ள சிறிய உதாரணம் , உடலை ஒரு நீர் தேக்கத்தோடு நாம் ஒப்பிடுவோம் .
முதற்கட்டமாக -நீர் தேக்கம் வலுவாக இருக்க வேண்டும் ,கசிவு ஏற்படக்கூடாது ,பெருவெள்ளங்களை தாங்கும் வல்லமை அதற்க்கு வேண்டும் .
பேராபத்துகளை தடுக்கும் முயற்ச்சி -வருமுன் காப்போம் (preventive measure) இதை தான் முதற்கட்ட சிகிச்சை என்று சொல்கிறோம் , தடுப்பூசி ,சுகாதாரம், உணவு முறைகள்,உடல் பயிற்சி ,தேர்ந்த வாழ்கை முறை இவை எல்லாம் இதில் அடங்கும் .
சரி அணை உடைந்துவிட்டது -அதி சரி செய்ய நாம் முயல்கிறோம் -இது இரண்டாம் கட்ட சிகிச்சை ,இப்பொழுது நம் முன் ஒரு பிரச்சனை ,அதை நாம் சரி செய்ய முயல்கிறோம் ,அதற்கேற்ற கவனத்தை நாம் அதற்க்கு அளிக்கிறோம் ,மருந்துகள், அறுவை சிகிச்சை எல்லாம் இதில் தான் அடங்கும் .இதில் இரு முடிவுகள் சாத்தியம் ,நமது சிகிச்சையால் அவர் நலம் பெறலாம் அல்லது அது பலனளிக்காமல் தவிக்கலாம் .
உடைந்த அணையை நம்மால் சரி செய்ய இயலவில்லை ,அதன் பாதிப்பை நாம் குறைக்க முயல்கிறோம் -இதுவே இறுதியான முயற்ச்சி ,நோய் நம்மை தாக்கி நிலை குலைய வைத்துவிட்டது ,ஆகினும் கூட நமக்கு நம் அன்றாட தேவைகள் இருக்கிறது ,அதை பிறர் உதவி இன்றி இறுதி வரை நாம் நம் வாழ்கையை வாழ நமக்கு உதவுவது , நமது இழப்புகளுக்கு ஏற்ற மாற்று முறைகளை பயன்ப்படுத்துவது .இரண்டாம் கட்ட சிகிச்சை தேறவில்லை என்றால் ,அவருக்கு இரு சாத்தியங்கள் ,ஒன்று நோயோடு நைந்து வாழ்வது அல்லது இறுதியாக உயிர் துறப்பது .இறுதி வரை அவரது வாழும் தரத்தை நாம் உயர்த்த முயன்றுக்கொண்டே இருக்க வேண்டும் .காலுடைந்தவருக்கு கம்பு போல இந்த முறைகள் மனிதனுக்கு உதவ வேண்டும் .
இந்த சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு மருத்துவத்தின் முக்கிய நோக்கு - வாழ்க்கையை ஜவ்வு மாறி இழுத்து வெறும் வருடங்களை சேர்ப்பது அல்ல ,இருக்கும் காலத்தை மேலும் பயனுள்ளதாக சுய சார்புடன் வாழ செய்வதே ஆகும் ,ஆங்கிலத்தில் இதை இப்படி கூறுகிறார்கள்
"the aim of rehabilitaion is not to add years to life,but to add life to years" (இது எனக்கு பிடித்த மிக சிறந்த வாக்கியம் ஆகும் !)

மருத்துவத்தின் நோக்கம் மரணமில்லா மனிதனை உருவாக்குவது அல்ல,அவனுக்கு இயல்பான மற்றும் அமைதியான ஒரு மரணத்தை ஏற்றுக்கொள்ள செய்வதே ஆகும் .
ஆயுர்வேதத்தின் நோக்கம் என்ன என்று சரகர் ஒரு கேள்வி எழுப்புகிறார்
அப்பொழுது அதற்க்கு ஆத்ரேயர் இவ்வாறு விடை அளிக்கிறார் ஆரோகியமானவனுக்குஅந்த ஆரோகியத்தை நீடிக்க செய்வது ,நோயாளிக்கு அந்த பிணியை போக்குவது ,இது இரண்டும் ஆயுர்வேதத்தின் நோக்கம் .இது கிட்ட தட்ட நவீன மருத்துவத்தின் கோட்ப்பாடுகளை ஒத்ததே .

நோய்களை சிகிச்சையை பொருட்டு இரண்டாக பிரிக்கிறது ஆயுர்வேதம்
சாத்யம் மற்றும் அஸாத்யம் (குறிப்பு -இன்றைய டி வீ மருத்துவர்கள் போல் டவுன் சின்றோம் உட்பட எல்லா நோயையும் ஆயுர்வேதம் முற்றிலும் குணப்படுத்தும் என்று அது கூறுவதில்லை )

சாத்யம் -மீண்டும் இரண்டாக பிரிக்கிறது ,சுசாத்யம்-எளிதாக குணப்படுத்தகூடியது ,க்ருச்ற சாத்யம் -அறுவை சிகிச்சை ,பஞ்ச கர்மா மூலம் குணப்படுத்துவது,சற்று கடினமானது ஆகினும் கூட குணப்படுத்த முடியும்
அஸாத்யம் -இதுவும் இரண்டு வகை , யாப்யம் - இவ்வகை நோய்கள் குணப்படுத்த முடியாது ஆகினும் கூட சில விதிமுறைகள் ,பத்தியம் கடைப்பிடித்தல் மூலம் நீண்ட நாள் வாழலாம் ,உதாரணம் -சர்க்கரை நோய் .
ஆணுபக்ரமம் -எதுவுமே செய்ய முடியாது ,உயிரை பறிப்பது நிச்சயம் .
எந்த வகை நோய்களாக இருந்தாலும் சிகிச்சை முக்கியம் என்கிறது ,ஆணுபக்ரமமாக இருந்தாலும் கூட, அவரது உயிர் பிரிதல் அவருக்கு வலியின்றி பிரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம் .

முக்கியமாக இன்னொரு கருத்தை வைக்கிறது ,அசாத்ய நோய்கள் சாத்யமாவது மிக கடினம் ,ஆனால் ,சாத்ய நோய்கள் தவறான சிகிச்சையின் வாயிலாகவோ அல்லது கவனக்குறைவு காரணமாகவோ அசாத்யம் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறது
நோய்கள் அதன் பிரிவுகள் ,சிக்கிச்சை அதன் பிரிவுகள் என்று பல விஷயங்கள் உள்ளன ,வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம் .

மேலும் தெரிந்துக்கொள்வோம் ....

குறிப்பு -உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை ,சந்தேகம் இருந்தால் அதை பின்னூட்டங்களில் தெரிய படுத்தலாம் ,அல்லது இந்த மின் அஞ்சலிலும் nalanda.aho@gmail.com தெரியப்படுத்தலாம் ,நேரம் கிடைக்கும் போது ஓரளவுக்கு நியாயமான ,நேர்மையான கேள்விகளுக்கு என் அறிவுக்கு எட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.

4 comments:

  1. "the aim of rehabilitation is not to add years to life,but to add life to years"


    .... True!


    nice write-up. :-)

    ReplyDelete
  2. /ஆணுபக்ரமம் -எதுவுமே செய்ய
    முடியாது ,உயிரை பறிப்பது நிச்சயம் ./

    இந்த வார்த்தையே இப்பதான் கேள்விப்படறேன்.

    'பின்குறிப்பு' உங்க நல் எண்ணத்தை காட்டுது. பலருக்கு பயன் அளிக்கும்னு நம்பறேன்

    ReplyDelete
  3. தொடர்ந்து கருத்துக்களின் வாயிலாக சித்ரா மேடம்,மற்றும் திருமதி .கிருஷ்ணன் ஊக்கம் அளிப்பது மிக்க மகிழ்ச்சி .

    ReplyDelete
  4. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_08.html

    ReplyDelete