Friday, November 19, 2010

குருஜி-4-சற்றே பெரிய கதை

கண்ணை மூடி அப்படியே கிடந்தேன் ,எனக்கு ஏதாவது ஏற்படுகிறதா என்று கவனித்தேன் , எதுவுமே நடக்கவில்லை ,முதல் மாற்றம் ஏற்ப்பட்டது தொடை லேசாக பிடித்து இழுத்தது ,லேசாக தலையை தூக்கி திருப்பி பார்த்தேன் கோவியும் ,நாயரும் அப்படியே தான் இருந்தார்கள் ,ஏதோ சத்தம், நாயரிடமிருந்து வந்தது ,குறட்டை ,நான் மட்டும் எழுந்து விட்டால் அவசர குடுக்கை ,என்றும் ஞான சூன்யம் என்றும் எண்ணி விடுவார்களோ என்று அப்படியே கிடந்தேன் .அப்பொழுது உணர்ந்தேன் ,பாதி பேர் நாயரை போல் ஆன்மீகத்தின் பெயரால் உறங்குகின்றனர் ,மீதி பேர் என்னை போல் சமூக நிர்பந்தத்தின் பெயரால் நடிக்கின்றனர் ஏதாவது நடக்குமா என்று காத்து நிற்கின்றனர் ,அந்த காத்திருப்பு ,அந்த வெறுமை எனக்கு என் வாழ்வின் மிக பெரிய பாடத்தை கற்று கொடுத்தது ,இது நமக்கான வழி அல்ல ,குரு என்று ஒரு மனிதரை ஏற்று கொள்ளுவதால் நாம் அவரை நிறை குறைகளுக்கு அப்பார்ப்பட்ட ஒரு நிலையில் நாமே அவரை தூக்கி வைக்கிறோம் ,இந்த உலகத்தில் நிறை குறைக்கு அப்பாற்பட்ட மனிதனே இல்லை ,அது நாம் வளர்த்தெடுக்கும் பிம்பமே அன்றி வேறெதுவும் இல்லை ,கோவி போல் ஒருவரை குருவாக சுமப்பதால் அவரை அசட்டு தனமாக சாக்கு சொல்லி நாம் அவரை குருவாக ஏற்றுக்கொண்டோம் என்கின்ற ஒரே காரணத்துக்காக அவரை தற்காக்கும் அவல நிலை எனக்கு வேண்டாம் ,மனிதர்களை நிறைகுறைகளோடு ஏற்று கொண்டு அவர்களை அப்படியே நேசிப்பதே சிறந்தது ,உண்மையை விட நமக்கு நம் நம்பிக்கைகள் முக்கியம் ,முழுமை என்பது இங்கு யாருக்குமே இல்லை ,மனிதர்கள் மொத்தம் இருவகை ,முழுமையை நோக்கி பயணிப்பவர்கள் அல்லது முழுமையை விட்டு விலகி செல்வபர்கள் ,ஆனால் யாருமே முழுமையானவர்கள் அல்ல இந்த பிரபஞ்சமே நமக்கு குரு நாம் கற்றுக்கொண்டே போகலாம் எப்படி வாழ்வது அல்லது எப்படி வாழக்கூடாது என்று .நமக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்கள் கூட பிறர் செய்கிறார்கள் என்பதால் நாமும் செய்கிறோம் ,நிர்பந்தத்திற்கு பணிகிறோம் .நம் சுயத்தை காட்டிலும் நம் சுயத்தின் பிம்பங்கள் நமக்கு முக்கியம் ,மற்றவர் கண்களிலும் ,மனம்களிலும் நம்மை நாம் நிறுவ முயல்கிறோம் .விதிகளுக்கு அப்பாற்பட்ட முழுமை என்பது மாயை ,ஏனெனில் விதிமுறைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது,முழுமையின் அளவீடும் மாறும் .,சடாரென்று நான் எழுந்தேன் நின்று கொண்டிருந்த அருணிடம் ,"நான் அவசரமாக ஊருக்கு போகணும் ,கோவி கிட்டயும் நாயர் கிட்டையும் சொல்லிடுங்க " என்று சொல்லி உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன் ,நான் குருஜியை காணவில்லை ,எனக்கு அவர் தேவை இல்லை ,எனக்கு கால்கள் இருக்கிறது என்று உணர்ந்த பின் ,ஊன்றுகோல் அவசியம் இல்லை ,எனது சட்டை பாக்கெட்டில் ,பர்சில் ,எந்த குருவின் படமும் வேண்டாம் ,ஒரு பாக்கெட் கண்ணாடி போதும் ,என்னை நான் நோக்குவதாலே ,என்னை நான் செதுக்குகிறேன் ,அபூர்வ சக்தியோ இல்லையோ எனக்கு இந்த குனியமுத்தூர் பயணம் தெளிவை அளித்தது ,என்னை நான் ஏமாற்றி கொள்ள தயாரில்லை
..
குனியமுத்தூர் பஸ் ஸ்டாண்ட் ,ஊருக்கு போக நின்றிருந்தேன் ,,அப்போது புறக்கண் இல்லாத அவள் என் அகக்கண்ணை திறந்தாள் "சார் ஸ்டிக்கர் ,போட்டோ ,பேனா ,எது எடுத்தாலும் அஞ்சு ரூவா ,ஏதாவது வாங்கிக்க சார் " ஆழ்ந்த சிந்தனையின் பிடியில் இருந்த நான் சடாரென்று விழித்து எழுந்தேன் பளிச்சென்று தெரிந்த அந்த ஸ்டிக்கர், நான் பார்த்து சிரித்தேன் ,ஐந்து ருபாய் கொடுத்து அதை வாங்கினேன் , அதே கூடையில் மூலையில் பாக்கி குருஜி கூலர்சொடு ,டிசைனர் காஸ்ட்யும் போட்டு கொண்டு பென்ஸ் காரின் பக்கவாட்டில் சாய்ந்து நின்று சிரித்தார் .
நானும் அவரை பார்த்து சிரித்தேன் ,நான் மனமெல்லாம் மகிழ்ச்சியோடு வாங்கிய அந்த ஸ்டிக்கரை சத்தம் போட்டு என் மனதுக்குள் படித்தேன்...

"உன் வாழ்க்கை ,உன் கையில் "

முற்றும்.
குறிப்பு -இது முற்றிலும் புனைவே ,எந்த ஒரு குருவையும் நேரடியாக தாக்குவது அல்லது எந்த மத ,இறை நம்பிக்கயாளர்களின் நம்பிக்கையை புண் படுத்துவது இதன் நோக்கம் அல்ல .
முந்தைய பகுதிகள்

13 comments:

  1. டாக்டர்,உங்கள் அறச்சீற்றம் புரிகிறது.
    ஆனால் சிலவற்றில் நல்லதும் உண்டு.நான் அண்மைக்காலமாக வேதாத்திரிய மனவளக்கலை பயின்று வருகிறேன்.மிக எளிமையான அணுகுமுறைகள்.அறிவியல் பூர்வமானவை.பொதுவாக,எனக்கும் எந்த ஒரு குருவைக் குறித்தும் மனத்தடைகள் உண்டு;இங்கு குரு உயிருடன் இல்லையெனினும் அவரை அதிகம் ஆராதிக்காமல், கோட்பாட்டை மட்டுமே முன் நிறுத்தியபடிதான் நான் அதில் ஈடுபட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. அம்மா
    கருத்துக்கு நன்றி .
    நானும் கூட வாழும் கலை பயிர்ச்சி -ரவி ஷங்கர் அவர்களின் நிறுவனம் நடத்திய பொழுது கற்றுக்கொண்டேன் .அதில் சில நன்மைகள் நமக்கு கிடைப்பது உறுதி ,எனக்கு அவர்கள் எல்லார் மேலும் ஒரு மதிப்பு உண்டு , சிலர் சமூகத்திற்கு சில நல்ல விஷயங்களை அவர்களின் மட்டத்தில் செயல்படுத்துகிறார்கள் அதே சமயம் அவர்கள் மீது கோவமும் உண்டு .என் கவலைக்கு காரணம் ,குருக்கள் தங்களை நிறுவனமாக மாற்றி ,வேறுமாதிரியான பாதைக்கு அழைத்து செல்கின்றனர் . அடிப்படை பயிற்சிகள் நமக்கு இத்தகைய அமைப்புகள் வழங்கும் ,அதன் பின் குருவே சொன்னாலும் நம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் பொருத்தி பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறேன் .உங்கள் பக்குவம் எல்லாருக்கும் வந்தால் எந்த பிரச்சனயும் இல்லை , ஆராதிப்பது கூட அவர்களின் தனிப்பட்ட அனுபவம் தான் ,ஆசிரமங்கலோ ,மடங்கலோ அதை ஒரு தின சடங்காக ஆக்குவது தான் வருத்தத்திற்கு உரியது .

    ReplyDelete
  3. உயர்ந்த கருத்துக்கள். உங்களையே உணர்ந்ததனால் உண்மை தெறித்து விழுகிறது. மிக நன்றாக இருந்தது

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பந்து அவர்களே

    ReplyDelete
  5. ஆழமாக யோசிக்க வைக்கும் கதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. நன்று நன்று மிக நன்று

    ReplyDelete
  7. திருமதி.கிருஷ்ணன் ,சித்ரா
    வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  8. தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

    http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

    ReplyDelete
  9. அன்பின் ரவி -இந்த செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி .மகிழ்ச்சி .எனது மற்ற இடுகைகளும் தேர்வாகி உள்ளது

    ReplyDelete
  10. அன்பு அண்ணன் அவர்களுக்கு,
    மிக அருமையான இயல்பான புனைவு...நல்ல நீண்ட ஒரு பயணம் போல இருந்தது படித்த பின்பு..தெளிவான மற்றும் செம்மையான கருத்துக்கள். உங்க புற பயணத்தை காட்டிலும் நீங்கள் எடுத்தியம்பும் அகப்பயணம் காற்றில் மிதக்கும் இலைபோல் மெதுவாய் மனதை தொடுகிறது..என் பள்ளி பருவத்தில் நானும் சில தியான வகுப்புகளுக்கு சென்றுள்ளேன். வேதாத்ரி மகரிஷியின் எளிய முறை குண்டலினி யோகம், க்ரியா யோகம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தேன். முடிந்த வரையில் அணைத்து வகுப்புகளுக்கும் சென்றேன். எனக்கு அப்போது நிரம்பிய பக்குவம் இல்லாத காரணத்தினால் நான் ஒருவரி விடுத்தது மற்றொரு குருவை நோக்கி பயணித்தேன். பயணிக்கிறேன் ..
    நீங்கள் சாடி இயற்றியுள்ள புனைவில் உங்களின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இவ்வாறு நிகழ்வது இயல்பு என நான் நெனைக்கிறேன்.
    இறைகூடங்களிலேயே வியாபாரம் வந்துவிட்ட பின்பு இறை அடியார்களின் கூடாரங்களில் வியாபாரம் வராமலா இருக்கும்?..மற்றொன்று... முக்தி அடையும்வரை அனைவருமே யாத்ரிகர்கள் தான். எப்பேர் பட்ட குருவாக இருந்தாலும் அவரும் பயணியே...நீங்கள் குறிப்பிடும் குருவாக இருந்தாலும்...காற்றுக்கு பதிலாக கதவு வாயிலாக யாரையோ வரவைக்கும் குருவாக இருந்தாலும் அவர்களுக்கும் சோதனைகள் உண்டு. இங்கு நான் சோதனைகள் என்று சொல்வது கடவுள் ஒவ்வொருவருக்கும் வைக்கும் சோதனைகள்..இங்கே நான் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை..உயர்ந்தநிலை அடைந்த பின்பும் கூட கடவுள் சோதனைகளை வைக்கிறார். சிலருக்கு பணத்தால் சோதனைகளும்.சிலருக்கு பெண்ணாசையால் சோதனைகளும் வைக்கிறார். இதையும் தாண்டி முக்கி அடைவது அவரவர் சாமர்த்தியம். வைராக்கியம் ......ஒருவேளை நீங்கள் குறிபிட்டுள்ள குருவிற்கு இத்தகையா சொதனைகில் ஒன்ற இருக்கலாம் அவரது ஆசிரமத்தில் நடக்கும் பண புழக்கமும் வியாபாரமும். ..அதை சமாளிப்பது அவர்பாடு ...அவரை விடுத்தது அவர் வாயில்லாக இறைவன் கூற இயம்பும் எண்ணங்களையும் , உயர்ந்த கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்...உங்கள் கூற்றில் நிறைய மகத்துவம் இருக்கிறது ...மனமே கோவில் அன்பே கடவுள் என்பது மிக சரியே!!! வேதங்கள் , யோகா சூத்திரங்கள் யாவும் நமக்கும் நீச்சல் கற்று கொடுப்பவைதான்..அனால் நீந்த போவது நாம்தான்.....குருவை விடுத்தது நீங்க உங்களுக்கு உங்களை குருவாய் பாவிப்பது கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள் அண்ணா.. ஆனால் சில நேரங்களில் கடவுளின் அலகிலா விளையாட்டுக்கள் விசித்திரமானவை!!
    " கால்கள் இருக்கின்றன என்று தெரிந்த பின் ஊன்றுகோல் எதற்கு??" ---மிக அருமையான வாசகம் அண்ணா..

    ReplyDelete
  11. ஆனால் நமக்கு கால்களே பொது. ஊன்றுகோல் தேவையில்லை என்று தெரியபடுத்த ஒரு ஊன்றுகோல் தேவைபடுகிறது....அதாவது உங்களுக்கு நீங்களே குரு. வேறு ஒரு வெளி குரு தேவை இல்லை என்பதை உணர்தவாயினும் நீங்கள் கூறி உள்ளதை போல் குருக்கள் தேவை படுகிறார்கள்....உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தெளிவு பிறக்க அந்த ஆசிரமம் கரவிகாக இருந்துள்ளது ...நீங்கள் அதை தூற்றினாளும்கூட இறைவன் அதை கறுவியாய் வைத்து உங்களுக்கு ஒரு இறை அனுபவத்தை ஏபடுத்தி உள்ளார் என்று எண்ணுகிறேன்....இந்தவகையில் இறைவனும் வென்று விட்டார் ..நீங்களும் வென்று விட்டீர்கள். ( அயோக்கியத்தனம் செய்யதாலும் உங்களுக்கு தெளிவு பிறக்கு கறுவியாய் இருந்த வகையில் அந்த ஆசிரமும் அந்த குருவும் கூட வென்று விட்டார்கள்!)
    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம் என்பது திருமூலர் வாக்கு...ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதமான மலரை போல. அவர்கள் பூத்து மலருவதற்கு ஒவ்வொரு காலம் தேவைபடுகிறது..குருவானவர் அதற்க்கு துணை புரிபவர் மட்டுமே ...காரண கர்த்தா இறைவனே!.....So even that place you went is sacred and spiritual amidst all odds prevailing over there. When you start seeing spirituality even in adversity, enlightment is only in a hand's reach. Try seeing that my dear anna..

    ஒரு முறம் நல்லதை மட்டுமே தக்கவைகிறது
    ஒரு சல்லடை தெவையற்றதை மட்டுமே தக்கவைகிறது.
    நாம் முறமா சல்லடையா என்பது நம் கைகளினிலே !!

    நீங்கள் குறிப்பிடுவதில் நான் மாறுபடுவது இதில் மட்டுமே !!! Just trying to say that in every breaking point, there is an opportunity of breakthrough.....As Lord Krishna say's
    sarva-dharman parityajya
    mam ekam saranam vraja
    aham tvam sarva-papebhyo
    moksayisyami ma sucah....

    We are destined to walk certain paths in certain duration. Guru s are only pit stops in such long journey. Your article are an eye opener to anyone who consider anyone as their final destination. V nice work anna..
    கிருஷ்ணார்ப்பணம் !!!!

    ReplyDelete
  12. /முக்தி அடையும்வரை அனைவருமே யாத்ரிகர்கள் தான். எப்பேர் பட்ட குருவாக இருந்தாலும் அவரும் பயணியே...நீங்கள் குறிப்பிடும் குருவாக இருந்தாலும்...//
    இதை தான் நான் அழுத்தமாக கூறுகிறேன் ..அவர்கள் அவர்களை சுற்றி எழுப்பும் அந்த மாய ஒளியை ,-அதை தான் நான் பிரச்சனையாக கருதிகிறேன்.
    //அவரை விடுத்தது அவர் வாயில்லாக இறைவன் கூற இயம்பும் எண்ணங்களையும் , உயர்ந்த கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்..//
    அடுத்த சிக்கல் ,செயலும் செயல்படுவரும் வேறு வேறு அல்ல ,அப்படி இருக்கையில் தான் நடைமுறை செய்யாத,உணராத விஷயத்தை இன்னொருவருக்கு போதிக்க வேண்டியது இல்லை .
    நிச்சயமாக -அவர்களினால் ,அவர்களின் உபதேசங்களினால் ,செயல்களினால் சில மாற்றங்கள் விளைந்திருக்கலாம் -நான் ஏற்று கொள்கிறேன் ,ஆனால் அதையும் தாண்டிய ஒரு பயணம் இருக்கிறது என்பது நிதரிசனம் ,அவர்களின் காலடியில் விழுந்து கிடப்பதில் என்ன பலன் ?

    ReplyDelete
  13. //குருவை விடுத்தது நீங்க உங்களுக்கு உங்களை குருவாய் பாவிப்பது கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது...//
    நான் என்னை குருவாக கருதவில்லை உமா ,என்னை சுற்றி இயங்கும் ஒட்டு மொத்த பிரபஞ்சத்தை நான் குருவாக ஏற்கிறேன் ,ஏதேனும் ஒன்று கற்று கொள்ள எல்லா இடத்திலும் உண்டு .இயற்கையை உடற்று நோக்கி அது நம்முள் ஏற்படும் மாற்றங்கள் மூலம் நமக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள முயல்கிறேன் .
    //அதாவது உங்களுக்கு நீங்களே குரு. வேறு ஒரு வெளி குரு தேவை இல்லை என்பதை உணர்தவாயினும் நீங்கள் கூறி உள்ளதை போல் குருக்கள் தேவை படுகிறார்கள்....உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தெளிவு பிறக்க அந்த ஆசிரமம் கரவிகாக இருந்துள்ளது //
    இதை தான் நானும் சொல்கிறேன் ,மேலே சொன்ன விதத்தில் .எனது குரு எனது கட்ற்றளுக்கு கட்டுபாடுகள் விதிப்பவர் அல்ல ,என்னை என் இயல்பிற்கு விட்டு உண்மையை கண்டடைய உதவுபவர் ,ஆதலால் எந்த ஒரு தனி நபரையும் இவர் மட்டும் குரு என்று என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை ,மற்றபடி நீ சொல்வர்தர்க்கும் நான் எண்ணுவதற்கும் பெரிய வித்யாசம் இல்லை .

    உனது இந்த நீண்ட பொறுமையான பின்னூடத்திற்கு நன்றி உமா தம்பி ,

    ReplyDelete