பேருந்தில் மீண்டும் இளைய சேனாதிபதி படம் ஒன்றை போட்டார்கள் , சரி இந்த புத்தகத்தை பிரட்டி பார்க்கலாம் என்று முடிவு செய்து தொடங்கினேன் .ஆஹா ஒவ்வொரு வரிகளும் தத்துவ தேன் சொட்டியது ,நம் லட்சியங்களை துரத்தி செல்ல வேண்டும் , அதை எட்டி பிடிக்க வேண்டும் ,ஆசை பட வேண்டும் ,அதை அடைய நாம் அயாராது முயல வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கை தெறித்தது , அதிலும் அதில் அவரது சொந்த அனுபவங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் ஒவ்வொன்றும் பிரமாதம் ,மசால் தோசைக்காக மைசூரு வரை சைக்கிள் மிதித்து வந்த கதையை கேக்கும் போது அவரது லட்ச்சிய வெறி தெரிகிறது ,மசால் தோசை தானே என்று நாம் அசால்ட்டாக எண்ண கூடாது ,அதையும் விடாமல் துரத்தி அடைய வேண்டும் என்கிறார் குருஜி .அவரது சிறிய வயதில் ஓணான்களின் கழுத்தில் சுருக்கு மாட்டி பிடித்து இழுத்து செல்லும் அந்த குறிப்புகளை வாசிக்கும் போதே அவரது முழு வீரம் புரிகிறது , அவர் எதுக்கும் துணிந்தவர் என்று புரிகிறது ,சீச்சு சீச்சு தனது பென்சிலை குட்டியூண்டு ஆகும் வரை பாதுகாத்து வைப்பாராம் ஆஹா என்ன ஒரு சிக்கனம் , பின்பு அதை தன்னுடன் படிக்கும் ஏழை நண்பனுக்கு இலவசமாக கொடுத்துவிடுவாராம் .இதுவல்லவோ தயை ,கருணை கடலே என்று என் கண்கள் பணிந்தது .அவருக்கு ஞானம் வந்த கதை அபாரமானது அவரது 13 ஆவது வயதில் அவருக்கு 13 நாள் பொண்ணுக்கு வீங்கி வந்து வேறு வழி இல்லாமல் பேச முடியாமல் இருந்தாராம் ,அப்போது தான் அந்த மிருகின ஜம்போ க்ரியாவை அவரது ஞான குரு அரூபமாக வழங்கினாராம் .
பூர்வாசிரமத்தில் அவரது இயற் பெயர் தேவா, அவர் சாயங்கால வேளைகளில் மைசூர் பஸ்ட் ஸ்டாண்டில் சுக்கு காப்பி விற்றதனால் ,நாளடைவில் சுக்கு தேவா என்று அழைக்க பட்டு அதுவே மருவி சுகதேவ் என்று ஆனதாம் .பூர்வ ஜன்ம கர்மங்களில் கொஞ்சூண்டு மீதி -பாக்கி இருந்ததால் இந்த ஜன்மாவில் அதை கழிக்க அவர் அவதரித்து உள்ளார் என்பதால் பாக்கி சுகதேவ் ஆனார் .(அவர் ஏதோ நிதி நிறுவனம் நடத்தி அதில் பலருக்கு பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாக நண்பன் சுப்பு சொன்னான் !அதெல்லாம் பொய் என்று இதை படித்த உடன் தெரிந்து கொண்டேன் ).என் மனமெல்லாம் மகிழ்ச்சி நம்பிக்கை பொங்க அப்படியே உறங்கி விழித்தேன் , கோவி " வெங்கி எந்திரிங்க ,நாயர் எந்திரியா ,குனியமுத்தூர் வந்துருச்சு " என்று சொல்லி தட்டி எழுப்பி ,தட்டுமுட்டுகளை எடுத்து கொண்டு இறங்கினோம் , அங்கேருந்து இன்னொரு பேருந்து பிடிச்சு தூக்க கலக்கத்தில் அந்த காலை பொழுதில் மலைகள் சூழ ஒரு அற்புதமான இடத்தில் இறங்கினோம் "பாஷா யோகா மையம் உங்களை வரவேற்கிறது " என்று ஒரு பெரிய விளம்பரம் ,குருஜி படையப்பா தலைவர் மாறி ஒரு படமெடுத்த நல்ல பாம்பை முத்தம் கொடுக்கும் பிரம்மாண்ட படம் எங்களை வரவேற்றது ,நாயர் "சாரே பாம்பு கூட இவ்வுட நல்ல போஸ் குடுக்குது " என்று என் காதில் முணுமுணுத்தான் ."வாங்க" என்று எங்களை உள்ளே அழைத்து போனான் , ஒரு வட நாட்டு இளைஞன் வெள்ளை குர்தா போட்டு கொண்டு "ஹாய் கோவி" என்று கூவினான் ,"ஹை அருண் "! என்று இவனும் கூவினான் , எங்களை எல்லாம் அறிமுகபடுத்திவிட்டு ஏதோ பேசிக்கொண்டே உள்ளே நடந்தோம் , அப்பொழுது மொட்டை தலையுடன் ஒரு இளம் வயது பெண் துறவியை காவி உடையில் கண்டோம் , எனக்கு மனதில் ஏதோ செய்தது ,கோவி " பிரானாம் மாதா ஜி " என்று வணக்கம் வைத்து எங்களை அறிமுகம் செய்தான் ,நான் கோவியிடம் கேட்டேன் "என் இவங்க மொட்டை அடிசுருக்காங்க ?", கோவி சொன்னான் " அவங்க சன்யாசம் வாங்கிட்டாங்க ,துறவறம் பூண்டதுனால இந்த மாறி ஆகிட்டாங்க இதெல்லாம் பெரிய விஷயம் " நாயர் கவட்டை போட்டான் " சாரே குருஜி கூட சந்நியாசி தான அப்புறம் என் அவரு மட்டும் நெறைய முடி வெச்சுகிட்டு அதுக்கு மைண்டனன்ஸ் எல்லாம் செலவு ஆகுமே ,அது எப்படி சாரே " என் மனதில் சிறு நெருடலாக தோன்றிய இந்த வினாவை கேட்டே விட்டான் , சற்று கடுப்பான கோவி "நாயர் கடவுள் , எப்படி வேணாலும் இருப்பார் ,அவருக்கு விதிகள் கிடயாது ,அத இந்த உலகத்துக்கு உணர்த்த தான் அவரு இப்டி இருக்கார் ,புரியுதா " என்று லேசாக கடித்தான் ,எனக்கு அவன் ஏதோ சப்பை கட்டு கட்டியதாக பட்டது .
எங்களுக்கு ஒரு அறை ஒதுக்க பட்டது ,குளித்து சிற்றுண்டி உண்டு வெளியே வந்தோம் ,அங்கே அருண் எங்களுக்காக காத்திருந்தான் ,"வாங்க சுத்தி பாக்கலாம் .என்று அழைத்து சென்றான் ,குருஜியின் பிரசங்கம் ஒலிபெருக்கியில் கேட்டு கொண்டிருந்தது ,"கடவுள்ங்க்றவர் எங்கயோ இல்ல இங்க உங்க பக்கத்துல ,உங்களுக்குள்ள இருக்குறார் ,நாம அவர மறந்துட்டோம் ,நாம் எல்லாரும் கடவுள் ,கடவுளின் பிம்பம் , அந்த உணர்வு நமக்கு இருந்தால் போதும் நாம் கடவுள் " என்று அற்புத சொற்பொழிவு கேட்டது ,பக்க வாட்டில் உள்ள ஒரு அமைப்பில் பல பொருட்கள் விற்ப்பனைக்கு உள்ளதாக சொன்னான் அருண் , உள்ளே பொய் பார்த்தால் எங்கும் குருஜியின் படங்கள் புலி குட்டியுடன் விளையாடுவது போல் ,சிறு குழந்தையை கொஞ்சுவது போல் ,ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல் , கோல்ப் விளையாடுவது போல் என்று பல்வேறு சைஸ் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு விலை .நாயர் கேட்டான் " சாரே நாம எல்லாரும் கடவுள்னு குருஜி சொல்லுறார் , பின்னே எதுக்கு சாரே அவரோட இத்தனை படம் ?" என்று இயல்பாக என் மனசாட்சியில் வந்த கேள்வி நாயரின் வாய் வழியாக வந்து விழுந்தது , அருண் "குருஜி பூஜா நேரம் நீங்க பாருங்க நா வரேன் " என்று நழுவி விட்டான் ,கோவி சங்கடத்தில் நெளிவது தெரிந்தது ,"நாயர் உனக்கு நம்பிக்க இல்லன விடு,நீ ஒன்னும் வாங்கவேணாம் ,நாங்க உன்ன வாங்க சொல்லல " என்று சொன்ன போது உண்மையிலயே அவன் மீது எனக்கு பரிதாபம் ஏற்ப்பட்டது .
ஓரிடத்தில் பல பக்த்தர்கள் வித்யாசமான கோலத்தில் படுத்திருந்தனர் , இடக்கையை மேலே நீட்டி ,வலக்கையை மடித்து நெற்றிக்கு அடியில் வைத்து ,இடக்காலை நீட்டி வலக்காலை 4 போல மடித்து ,குப்புற படுத்திருந்தனர் ,அதுவும் அசைவற்று .நான் கேட்டேன் "என்னத் இது ?", கோவி பக்கத்தில் அதே மாறி வடிக்க பட்ட ஒரு சிற்ப்பத்தை காண்பித்தான் ,"இந்த மாதிரி படுத்து இருக்கும் போது பல சூக்ச்ம சக்கரங்கள் திறக்கும் ,பேரானந்தம் கிடைக்கும்ன்னு குருஜி சொல்லிருக்கார் ,எல்லாரும் மணிக்கணக்கில் இந்த மாறி இங்க வந்து படுத்து இருந்து சமாதி நிலைக்கு போய் வருவாங்க ,நீங்களும் இப்ப படுத்து பாருங்க"
என்று அவன் சொல்லிய படியே படுத்து விட்டான் ,சற்று தயங்கிய நாயரும் கூட தயாராகிவிட்டான் ,வேறுவழி இன்றி நானும் கூட .அப்பொழுது நான் எண்ண
வில்லை என் வாழ்கையே நான் மறுபடியும் எழும் போது மாறப்போகிரதன்று .
தொடரும் ...
No comments:
Post a Comment