எல்லாம் மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கியது ,ஊருக்கு போன என்னை எனது மாமன் மகளுக்கு பேசி முடித்தார்கள் ,வருகிற தை மாதம் திருமணம் என்று முடிவாயிற்று .சிறு வயதிலிருந்தே பார்த்து பழகியவள் எனக்கு எப்பொழுதுமே அவளை பிடிக்கும் என்பதாலும் நானும் ஒத்து கொண்டு ,அவளுக்கும் பிடித்திருக்கும் எனும் நம்பிக்கையில் தட்டு மாற்றி விட்டு சென்னைக்கு வந்தேன் ,சென்னை வந்த இரண்டாம் நாள் எனக்கு போன் செய்தால் ,தான் இப்பொழுது வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாகவும் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் ,வேறொரு பையனை காதலிப்பதாகவும் ,அவன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பனி புரிவதாகவும் கூறினாள். இத்தனையும் சொல்லிய பிறகு நம்மால் ஆன எதையாவது செய்வோம் என்று எங்கள் வீட்டை எதிர்த்து அவளுக்கு பையன் வீட்டு சம்மததோடு சென்னையிலயே பதிவு திருமணம் நடத்தினேன் .எல்லாம் கிரகம் பிடிச்ச தமிழ் சினிமா பாத்ததால வந்த வினை , நாமளும் ஹீரோ ஆகலமேன்னு ஒரு நப்பாசை ,இப்பொழுது என் அம்மா மற்றும் ஊரில் உள்ள உறவினர்கள் என் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ,நான் அவர்களுடன் பேச முயன்றும் பயனில்லை .பெரும் மன உளைச்சலில் என்னால் எதிலுமே சரியாக கவனம் செலுத்த முடியவில்லை .
இந்த இரண்டு மாதங்களாக நான் மட்டும் மாறவில்லை எனது அலுவலகத்தில் கோவிந்தனும் மாறிவிட்டான் .கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து டாப் பெர்போமர் அவன் தான் .ஆபீஸ் வண்டியை எடுத்து கொண்டு முக்கு கடையில் முட்டை போண்டா சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு ,பேப்பர் படிச்சிட்டு ,எதிர் வரிசையில் உள்ள வசந்த் அண்ட் கோ வாசலில் நின்று கிரிக்கெட் போட்டி பார்த்து விட்டு பொறுமையாக அலுவலகம் வருவான் ,"சார் கிளயண்ட் அவுட் ஒப் ஸ்டேஷன் ,ரெண்டு நாள் கழிச்சி வர சொல்லிருக்காங்க " என்று வாய்ஸ் கார்டு கூசாமல் பொய் சொல்லுவான் (வாயை விட வாய்ஸ் கார்ட் தான் முக்கியமுங்க ).இப்படி சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கை இப்பொழுது திடீர் மாற்றம்,அவனை சுற்றி ஏதேதோ கதைகள் உலா வந்தது எனது அலுவலகத்தில் .ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது ரெட் இருந்தாலும் கூட இவன் முன்னாள் நிற்கும் வண்டிகளை வெறுப்பேற்றும் வண்ணம் ஒளிரும் ஹோரன் இப்போது அடிப்பதில்லயாம்,சிக்னலில் ஓரமாக ஒதுங்கி எல்லா வண்டியும் போய்விட்டதா என்று உறுதி செய்து கொண்டு தான் கிளம்புகிரானாம் .இந்த ஆச்சர்யத்தை நானே கண்டு ஊர்ஜிதப்படுத்தினேன் .எட்டணா சில்லறை பாக்கி தராத நடத்துனர் சட்டையை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போன கதை எனக்கு தெரியும் ,ஆனால் இப்பொழுது எல்லாம் சில்லறை தராத நடத்துனரை பார்த்து மர்ம புன்னகை புரிவதோடு சரியாம் ,அன்றொரு நாள் 5B பேருந்தில் வரும்போது இப்படி தானாம் சில்லறை கொடுக்காத நடத்துனரிடம் இறங்கும் பொழுது சிரித்து கொண்டே சொன்னானாம் "அந்த எட்டணாவ நீங்களே வெச்சுக்குங்க ,ஆஸ்பத்திரில இருக்குற உங்க பையனுக்கு உதவும்" இதை கேட்ட அந்த நடத்துனர் கர்நாடகா திறந்து விட்ட காவேரி நீர் போல் போல போல வென அழுதே விட்டானாம் "சாமி நீங்க தெய்வம் " என்று சொல்லி கோவிந்தனின் காலை பிடித்தான் என்று அந்த பஸ்சில் பயணித்த மதன் என்னிடம் சொன்னான் .நம்புவதா இல்லையா என்று யோசனையில் இருந்தேன் .வீரு இன்னொரு கதை சொன்னான் அவனும் கோவிந்தனும் ஒரு நாள் சாயங்காலம் தாம்பரத்தில் ஒரு க்ளயன்ட்டை பார்க்க மின்சார ரயிலில் சென்றார்களாம் , ஏற்க்கனவே ரயில் பெட்டி வேலைக்கு சேர்ந்த புதிதில் தைத்த காக்கி சட்டையை இருவது வருட சர்வீசுக்கு பிறகும் போட்டிருக்கும் போலீஸ் காரரின் தொந்தியை போல் கூட்டம் பிதுங்கி வழிந்ததாம் ,அப்பொழுது திருசூலம் ஸ்டேசன்னில் ஒரு துபாய் ரிட்டன் பார்ட்டி இரண்டு பெரிய பெட்டிகளை தூக்கி கொண்டு வந்தாராம் ,ஒரு பெட்டியை கூட்ட நெரிசலில் கோவிந்தனின் கால் மேல் தூக்கி வைத்துவிட்டாராம் ,இதே பழைய கோவிந்தனாக இருந்தால் அங்கு ஒரு கிடா வெட்டு நடந்திருக்கும் , ஆனால் கோவிந்தன் சிரித்து கொண்டே அந்த ஆசாமியிடம் சொன்னானாம் " சார் ட்ரைன்ல இடம் இல்லை ,புரியுது, என் இன்னொரு கால் கூட ப்ரீயா தான் இருக்கு அது மேல கூட உங்க இன்னொரு பெட்டிய வைக்கலாமே " இதை கேட்ட உடனே அந்த துபாய் ரிட்டன் ,ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொன்ன ஏசு பிரானே தன் கண் முன்னாள் வந்து விட்டதாக எண்ணி ,குரல் தழுதழுக்க தனது கழுத்தில் உள்ள புதிய துபாய் தங்க சங்கிலியை அவனுக்கு அணிவித்துவிட்டு ,பிதா சுதன் பரிசுத்த ஆவி ,ஆமென் என்று சொல்லி கண்ணீர் மல்க விடை பெற்றானாம் .
இப்படி ஏகப்பட்ட கதைகள் தினம் தினம் கோவிந்தனை பற்றி காதில் விழுந்த வண்ணம் இருந்தது .இதற்க்கு எல்லாம் காரணம் அவன் இரண்டு மாதங்களுக்கு முன் அவன் குனியமுத்தூரில் உள்ள பிரபல குரு ஜி பாக்கி சுகதேவ் மகாராஜ் அவர்களின் ஆஸ்ரமத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி மிருகின ஜம்போ பிராணாயாமமும் ஆசனங்களும் கற்று வந்தது தான் என்று என் காதில் சுப்பு கிசுகிசுத்தான் .ஒரு நாள் அவனிடமே சென்று என்ன ஏது என்று கேட்டுவிடலாம் என்று எண்ணினேன் ,அவனிடம் எனது பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கும் என்று எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை .
அதற்கேற்ற சந்தர்ப்பமும் வாய்த்தது....
தொடரும்
குறிப்பு - இது என் முதல் சிறு கதை முயற்ச்சி ,அது சற்றே பெரிய கதையாக வந்து விட்டது .இதில் வரும் பெயர்களும் ,சம்பவங்களும் முற்றிலும் புனைவே ,எனது நெருக்கமான நண்பர்களின் பெயரையே இதற்க்கு நான் பயன் படுத்தி உள்ளேன் .இது யாரயும் குறிப்பது அல்ல ,மேலும் யாரையும் இது எந்த மதத்தின் நம்பிக்கையும் அல்லது தனி நபர் நம்பிக்கையும் சாடும் முயற்ச்சி அல்ல .கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் சிந்திக்க .
அவ்வளவு பெரிய கதையல்ல. :-)
ReplyDeleteசிரிக்கவும், சிந்திக்கவும் தான்! நல்ல பகிர்வு!
சேட்டை சார் :)
ReplyDeleteஇது முதல் பகுதி இன்னும் இரண்டு பகுதி வரும் போல இருக்கு அதனால தான் சற்றே பெரிய கதைன்னு சொன்னேன் :)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Dai..
ReplyDeleteGood way to start writing a story.. Nice flow in dialogues. But some small mistakes in describing a situation and words.. But overall, an eloquent description of a common scenario..
இது என் முதல் சிறு கதை முயற்ச்சி //
ReplyDeleteவாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு..
ஹீரோ வெங்கட் :) வணக்கம் ,எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஸ்
ReplyDeleteGood One dr....
ReplyDeleteஎன்னடா டாக்டர் கலக்குற ஆனா நாமளா விட்டிட்டியே மச்சான்!!!
ReplyDeleteநட் , சிவா நன்றி :)
ReplyDeleteரியல் எஸ்டேட் தாதா கத ஒன்னு இருக்கு அதுக்கு நீ தான் ஹீரோ :)
naa dan villon
ReplyDelete