புத்தகங்கள்

Pages

Tuesday, October 26, 2010

வேதனையான மருத்துவ சோதனை

இன்று சந்தைக்கு வரும் ஒவ்வொரு மருந்தும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின் தான் வருகிறது .முதல் கட்டமாக நோயின் கூறுகளை ஆராய்ந்து அதை எந்த கட்டத்தில் வீழ்த்த வேண்டும் எனும் அறிவு ,பின்பு அந்த நோயின் கட்டமைப்பு எனும் பூட்டை உடைத்து அதற்கேற்ற சாவியை கண்டடைதல் .அந்த சாவி ஒரு புரதமாகவோ , ஹோர்மோன், என்று எதுவாகவும் இருக்கலாம் .இதை கணினி துணை கொண்டு (simulation technic-drug designing) நோய்க்கு ஏற்ற கூட்டு அணுக்களை இது நமக்கு பகுத்து தரும் .பூட்டுக்கு ஏற்ற சாவியை கண்டு பிடிப்பது போல் தான் இது .அந்த கூட்டு அணுக்கள்(molecules) பின்னர் பரிசோதனை கூடத்திற்கு செல்கிறது அங்கு அதன் செயல்பாடுகள் ,மருத்துவ குணங்கள் , நோயை குண படுத்த தேவை படும் அளவு (therapeutic dose) , மருந்தினுடைய பாதுகாப்பான அளவு(safe dose/lethal dose) என்று பல கட்டங்கள் கடந்து , மிருகங்களில் செலுத்தி அதன் திறனையும் பாதுகாப்பையும் உர்ஜிதம் செய்து , மனிதர்களை சென்றடைகிறது .

முதலில் ஒரு சிறு பிரிவுக்குள் ( சுமார் 20-30)தன்னரர்வ நபர்களுக்கு மருந்தை செலுத்தி அவர்களை நாள் முழுவதும் கவனித்து ,அவர்களின் உடலில் ஏற்படும் அனைத்து உயிர் வேதியல் ( bio chemical) மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து ,மருந்தின் குண நலன்களை ,சாதக பாதகங்களை , பாதுகாப்பை , திறனை புரிந்துக்கொள்ளப்படுகின்றன .இதை முதற் கட்ட மருத்துவ பரிசோதனை என்று அழைகின்றனர் ( phase 1 clinical trials).இத்தகைய மனித பரிசோதனைகளுக்கு எதிக்ஸ் குழு உள்ளது , அது எல்லாம் விதிகளின் படி தான் நடக்கிறதா என்று கண்காணிக்கும்
.பரிசோதனையில் பங்கு பெரும் தன்னார்வ நபர்களுக்கு உரிய காப்பீடு , மற்றும் குடும்ப உறுபினர்களின் ஒப்புதல் ஆகியவை மிகவும் முக்கியம் .இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பரிசோதனை பல இடங்களில் இன்னும் அதிகமான மனிதர்களை கொண்டு நடத்த படும் .பின் மூன்றாம் கட்ட சோதனை பல நாடுகளில் பல்வேறு விதமான மக்கள் குழுக்களில் ,வெவ்வேறு மரபணு கூறுகள் ,சமூக நிலை , வயது , என்று பல்வேறு தளத்தில் நடத்த படும் .ஒரு மருந்து சந்தைக்கு வர இந்த அணைத்து கட்டங்களை கடந்து வர சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிடும் .

மருத்துவ வரலாற்றிலே ஆக பெரிய கரும்புள்ளியாக கருதப்படுவது அமெரிக்க அரசால் நடத்த பட்ட சிபிலிஸ் (syphilis) பரிசோதனை என கூறினால் அது மிகை ஆகாது .வெகு சமீபத்தில் அமெரிக்க அரசின் சார்பாக திருமதி .ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கௌதமேல (gauthamela) அரசிடம் மன்னிப்பு கோரியது .அப்படி என்ன தான் நடந்தது அங்கு ?
மேலே குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனை திட்டங்கள் வகுக்க முக்கியமான காரணமாக இருந்தது இந்த சம்பவம் தான் .சுமார் 64 வருடங்களுக்கு முன் அமெரிக்க அரசால் அங்கு நடத்த பட்ட மருத்துவ பரிசோதனை பற்றி சொன்னால் ,மனிதாபிமானமுள்ள எந்த ஆன்மாவும் வெட்கி தலை குனியும் .
இரு வேறு பரிசோதனைகள் நம் கண் முன் விரிகின்றன. முதலில் tuskeege பரிசோதனை ,அமெரிக்க சுகாதார துறையால் 1930 களில் தொடங்கி சுமார் நாற்பது வருடம் நடந்த இந்த சோதனையில் ஆப்ரிக்க- அமெரிக்க கறுப்பினத்தவர்கள் நானூறு பேரை மகான் கவுன்டி எனும் இடத்திலிருந்து தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது .இந்த நானூறு பேருக்கும் சிபிலிஸ் எனும் கலவியின் மூலம் பரவும் நோய் (sexually transmitted disease) இருந்தது .அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பயங்கர நோயாகும் .இவர்களை டாஸ்கீஜி,அலபாமா எனும் இடத்தில் வைத்து இவர்களுக்கு சிகிச்சை ,உணவு,உறைவிடம் மற்றும் ஈம கிரியைக்கான செலவை அளிக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி அழைத்து போனர். அவர்களில் நோயால் பாதித்த ஆண்கள் ,பெண்கள் ,பிறக்கும் போதே இந்நோயினால் பாதிக்க பட்ட குழந்தைகள் அடங்குவர் .அவர்களுக்கு இந்நோய் இருப்பதை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை .ஆனால் அவர்களுக்கு எந்த மருத்துவமும் அங்கு செய்யவில்லை , அவர்களுக்கு உள்ள நோயின் தன்மையை , பாதிப்பை ஆராய அவர்களை அப்படியே விட்டுவிட்டனர் .கல்வி அறிவு இல்லாத , ஏழை மக்களான அவர்கள் அரசாங்கம் அவர்களுக்கு நன்மை செய்கிறது , குணமாகிவிடும் என்று நம்பி அங்கு இருந்தார்கள் .1940 களிலயே சிபிலிஸ் நோய்க்கு பென்சில்லின் சிறந்த மருந்து என்று நிறுவப்பட்டது , பென்சில்லின் மருந்துகள் இருந்தும் கூட அந்த மருந்தை நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு இவர்கள் அளிக்காமல் அவர்களை சாக விட்டது தான் கொடுமை .அவர்களுக்கு இந்நோய்க்கு மருந்து உள்ளது என்றோ , அது கிடைக்க கூடிய தூரத்தில் தான் உள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை அல்லது இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து மறைக்க பட்டது .1972 ல் இந்த ரகசிய பரிசோதனை அம்பலமாகி நிறுத்தப்பட்டபோது வெறும் எழுபத்தி இரண்டு நபர்களே குற்றுயிரும் கொலையுயிருமாக மீதம் இருந்தனர்.

இந்த பூதத்தை தோண்டி துருவும் போது தான் கௌதமேலாவில் நடந்த சிபிலிஸ் பரிசோதனை பூதம் கிளம்பியது .
அங்கு சிறையில் இருந்தவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்த பட்டது .அலபமாவிலாவது நோய் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டனர் , இங்கோ நோய் இல்லாதவர்களுக்கு கூட நோயை பரப்பி பின்பு ஆராய்ந்தனர் !
ஆம் சிபிலிஸ் நோயை இந்நோய் உள்ள விலை மாதர்களை கொண்டு சிறையில் உள்ள கறுப்பின மக்களுடன் தொடர்பேற்படுத்தி இந்நோயை பரவ செய்தனர் !இதற்க்கு எதிர்ப்பு வந்த உடன் நோய் கிருமிகளை உரிய விதத்தில் பாதுகாத்து அதை நேரடியாக சிறைவாசியின் ஆணுறுப்பில் செலுத்தினர் !!இதில் ஈடுபட்ட டாக்டர் கட்ளர் இதை கடைசி வரை நியாய படுத்தியது இன்னும் கொடுமை !!இவர் அமெரிக்காவின் துணை சர்ஜென் ஜெனரல் பதவி வரை வந்தவர் !!

இது ஏதோ அமெரிக்காவில் நடந்தது ,அமெரிக்க ஏகாதிப்பத்தியம் அப்படி இப்படி என்று எண்ண வேண்டாம் , இரண்டாம் உலக போரின் போது நாஜிக்கள் ,ஜப்பானியர்கள் என்று இதை பலர் செய்து உள்ளனர் .இன்றும் pfizer போன்ற மிக பெரிய நிறுவனம் கூட ஆப்ரிக்காவில் விதிகளை மீறியதாக குற்றம் சாட்ட படுகிறது .இந்தியா இப்போது மருத்துவ பரிசோதனைக்கு மிக ஏற்ற நாடாக பார்க்க படுகிறது .நம்மூரில் உள்ள சொபளங்கி சட்டங்கள் , நம் மக்களின் அறியாமை , இங்கு உள்ள மக்கள் தொகை மற்றும் மரபணு வேற்றுமைகள் என்று பல காரணம் .நாம் மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறோம் , அதை அவர்களின் வசதிற்கு பயன் படுத்துகின்றனர் .இது எல்லா மருத்துவர்களுக்கும் பொருந்தாது .கிராம புறங்களிலும் , சேரி பகுதியிலும் பல மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன , அதில் நாம் பங்கேடுகிறோம் எனும் அடிப்படை கூட தெரியாமல் மக்கள் உள்ளனர் .இலவச மோகமும் இதற்க்கு காரணம் .நாம் விழிப்புடன் இருப்பது அவசியம் .மனிதனின் பேராசைக்கு அளவு இல்லமால் போய்விட்டது
மனித இனத்தின் சிறப்பு குணம் இது தான் போல- ஒரு சாரர்/தனி மனிதன் வளமோடு வாழ யாரையும் எதையும் அழிக்கலாம் , இதற்க்கு நாம் குரங்காகவே வனங்களில் திரிந்து இருக்கலாம்.

12 comments:

  1. Idhuvarai ariyadha thagavalgal.
    Romba kodumaya iruke..! Vedanayana vishayam.

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி .கிருஷ்ணன்
    மருத்துவ உலகத்துல இந்த மாறி இருட்டு பக்கங்கள் நெறைய உண்டு!

    ReplyDelete
  3. அன்புள்ள டாக்டர் சுனில் அவர்களுக்கு,வணக்கம்.தங்கள் மின் அஞ்சல் தெரியாததால் வலையில் நுழைந்து கடிதம் எழுதுவதற்கு மன்னியுங்கள்.பெண்ணியம் பற்றிய என் பதிவைப் பாராட்டிய உங்கள் கடிதம் கண்டதும் உங்கள் பதிவுக்கு வந்தபோது நீங்கள் காரைக்குடி என அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.அது 1950 முதல் 1970 வரை நான் பிறந்து வளர்ந்து படித்து ஆளாகிய திரு நகரம்.என் பிறந்தகத்திலிருந்து வரும் முதல் கடிதம் உங்களது.மிக்க நன்றி.தொடர்ந்து பெண்ணியம் பற்றி மொத்தம் 9பதிவுகள் வரும்.பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள்.நானும் யோகா படிப்பதால் தங்களிடம் ஆயுர்வேதம் அறிந்து கொள்ள விழைகிறேன்.அன்புடன்,
    முனைவர் எம்.ஏ.சுசீலா.

    ReplyDelete
  4. ரொம்ப‌ துய‌ர‌ம் த‌ரும் விஷ‌ய‌ம் அறிய‌ந்த‌ந்த‌மைக்கு ந‌ன்றி..ந‌ல்ல‌ ப‌கிர்வு சார்..

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி அஹ்மத் ஜி :)

    ReplyDelete
  6. ஆஹா !மிக்க மகிழ்ச்சி அம்மா :) நீங்கள் நம்ம ஊர் என்பதில் ரொம்ப சந்தோஷம் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தை வாசித்ததன் விளைவாகவே தங்கள் பெயர் எனக்கு பரிச்சயம் ஆனது ! மன்னிக்க எதுவும் இல்லை மட்டற்ற மகிழ்ச்சி தான் !

    ReplyDelete
  7. உங்க பதிவுகளில் நிறைய விசயம் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விஜி மேடம்:)

    ReplyDelete
  9. டாக்டர் சுனில், பலப்பல தகவல்கள்,சரளமான நடையில். சுவாரஸ்யமான பதிவுங்க.
    காரைக்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று. நான் திருச்சியில் இருந்த சமயம் அடிக்கடி வருவதுண்டு. உங்கள் ஊரின் விருந்தோம்பலும்,மக்களின் கனிவான பேச்சும் நெஞ்சை விட்டு அகலாதவை.

    ReplyDelete
  10. வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி மோகன்ஜி , அடுத்த முறை இந்த பக்கம் வரும் போது தகவல் சொல்லுங்க :)

    ReplyDelete
  11. இந்தியாவில் உள்ளவர்களை திருடித் தின்னும் எலியிலும் கேவலமான,மருத்துவ பரிசோதனை விலங்காய் எது மாற்றியிருக்கிறது.அவர்கள் நம்பும் மருந்துகளும்,விழிப்புணர்ச்சியின்மையும்தான்.64 வருடங்களுக்கு முன் கருப்பின மக்களிடம்,நடத்தப்பட்ட சோதனை போல பல நடத்தப்பட்டாலும் நம் மக்களுக்கு புரியவும் செய்யாது. அந்தக் கருப்பின மக்களைப் போல நம்மைக் காப்பாற்ற மருந்து கொடுப்பதாக எண்ணி,அத்தகைய விஷ மருந்துகளை அமிர்தம் போல் எண்ணி கடமையாய் தின்பார்கள்.என்று மடியும் இந்த அடிமையின் மோகம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாமீ அழகப்பன் ஐயா .உங்கள் வருத்தம் மிக ஞாயாயமானது

    ReplyDelete