Wednesday, September 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -2

ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் மூன்று முக்கிய நூல்கள் -ப்ருஹத் த்ரயீ - மூன்று முக்கிய படைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன . அவை முறையே சரக சம்ஹிதை , சுஸ்ருத சம்ஹிதை , அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகும் .
இதில் அஷ்டாங்க ஹ்ருதயம் என்னும் படைப்பு சரக .சுஸ்ருத கோட்பாடுகளை ஒருங்கிணைத்து தொகுத்த ஒரு படைப்பாகும் , இன்று பெரும்பான்மையான
ஆயுர்வேத வைத்தியர்கள் பயன்படுத்தும் மூல புத்தகமும் இதுவே ஆகும் .இதை இயற்றியவர் வாக்பட்டர், கேரளத்தை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது .இவரின் படைப்பையே மூலமாக கொண்டு கேரளாவில் ஆயுர்வேதம் இன்றும் சிறப்பாக திகழ்கிறது .இவரது காலம் 5-8 AD என்று கணிக்கப்பட்டுள்ளது .

இந்த மூன்று படைப்புகளும் வெவ்வேறு காலகட்டத்தில் படைக்கப்பட்டது , இவை அக்கால மனிதர்களின் தேவையை மற்றும் வாழ்க்கைமுறையை மனதில் கொண்டு பல விஷயங்களை முன்வைக்கிறது . சரகரின் காலத்தில் அறுவை சிகிச்சை அந்த அளவுக்கு பிரபலம் இல்லை .பாதரசம் ,கந்தகம் ,மனோசிலை போன்ற கனிமங்கள் பிரயோகம் அவ்வளவாக இல்லை அப்படியே இருந்தாலும் அவை வெளிப்ரயோகத்திற்கு மட்டுமே உள்ளது ,மூலிகை மருந்துகளே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது .சுஸ்ருதரின் காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை பிராதானமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் சற்றே அவசர பட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதிற்கு அறிகுறி .பின்னர் பௌத்த மதம் இந்தியாவில் வேரூன்றிய பின் அறுவை சிகிச்சை ஒரு விதமான ஹிம்சை என்றும் அது பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் ஒரு சித்திரம் தீட்டப்பட்டது ஆகையால் அது தடை செய்யப்பட்டது.

வாக்பட்டர் காலத்தில் கனிமங்களின் பயன்பாடு மருந்தாக எடுத்துரைக்கபடுகின்றன.அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அதே சமயம் வேகமாக பலனளிக்கும் சிகிச்சை முறையை கண்டெடுக்க முயன்றனர். அதன் விளைவு தான் ரச சாத்திரம் . தங்கம் ,பாதரசம் ,கந்தகம் ,இரும்பு ,தாமரம்,ஈயம் ,mica, ரத்தினங்கள் போன்றவற்றை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது இதன் நோக்கம் ஆகும் .நமது தமிழகத்தில் சித்தர்கள் இந்த கலையில் வல்லவர்கள் .இங்கிருந்து இம்முறைகள் நிச்சயமாக அங்கு சென்றதுக்கான சான்றுகள் நமக்கு கிடைக்கிறது .


பண்டைய காலத்து அறுவை சிகிச்சை முறை நமக்கு பெரும் ஆச்சர்யத்தை தர வல்லது .இன்றைக்கு உள்ளது போல் மயக்க மருந்துகள்(anaesthesia) அக்காலத்தில் இல்லை மது வகைகள் அறுவை சிகிச்சைக்கு முன் அளிக்கப்பட்டு முழுவதும் போதை ஏறிய அரைமயக்க நிலையில் தான் அந்த கால ஆபரேஷன் நடைபெற்றது .இன்றைக்கு உள்ளது போல் antiseptic measures அன்றைக்கு இல்லை ,ஆனால் வேப்பிலை ,மஞ்சள், குக்குலு போன்ற மூலிகைகளை அறுவை சிகிச்சை அறையில் புகை போடும் பழக்கம் உண்டு ,ரக்ஷோ தூபம் என்று பெயர், ராக்ஷஷர்களை அண்டவிடாது என்பதினால்
.இவை அனைத்திற்கும் கிருமி நாசம் செய்யும் வல்லமை கொண்டது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது .இன்றைய கிருமி தான் அன்றைய ராக்ஷசர்கள் போலும் .
மேலும் தெரிந்து கொள்வோம்...

5 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இவை அனைத்திற்கும் கிருமி நாசம் செய்யும் வல்லமை கொண்டது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது .இன்றைய கிருமி தான் அன்றைய ராக்ஷசர்கள் போலும் .
    ..interesting!!!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சித்ரா மேடம் & சரவணன் சார் :)

    ReplyDelete
  4. பண்டையகால வைத்திய முறைகளை தெரியாதவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கினீர்கள்...அருமை தொடர்ந்து எழுதுங்கள் எங்கள் வாழ்த்துகளுடன்...

    ReplyDelete