புத்தகங்கள்

Pages

Saturday, September 11, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -1






உலக அரங்கில் இன்று பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் மாற்று மருத்துவ முறைகளில் சீன மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் முன்னிலையில் இருக்கிறது .உலக மூலிகை சந்தையில் இந்தியாவிற்கு பெரும் பலம் உண்டு .இன்று தழைத்து இருக்கும் பழமையான மருத்துவ முறைகளில் சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் மிகவும் முக்கியமானது .

ஆயுர்வேதம் என்கின்ற இந்த சொல் வட மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது . ஆயுர் + வேதம் , வேதம் என்பது அறிதல் ,அறிவு என்பதை குறிக்கும் .ஆயுர்வேதம் என்பது வாழ்கையை பற்றிய அறிதல் / அறிவு என்று பொருள்ப்படகூடியது.
இது ஒரு மருத்துவ முறை என்பதை காட்டிலும் , ஒரு வாழ்கை முறை என்பதே பொருத்தம் .

ஆயுர்வேதத்தில் மருத்துவம் மட்டும் இன்றி , உணவு பழக்கங்கள் , அன்றாடம் செயல் படுத்த வேண்டிய கடமைகள் , புவியியல் , வேளாண்மை , சமையல் கலை . பௌதிகம் , வேதியல் ,மனோ தத்துவம்,தத்துவம் , ஜோதிடம் ,தாவரவியல் ,விலங்கியல் என பல விஷயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது .மேலும் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் அதனின் அடிப்படை விரிவாக பேசப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் வரலாறு
இன்று ஓரளவுக்கு முழுமையாக நமக்கு கிட்டும் ஆயுர்வேத படைப்பு சரக சம்ஹிதையே ஆகும் .இதன் காலம் 1200-1000 BC என்று அனுமானிக்க படுகிறது .சரகர் , அக்னிவேஷ சம்ஹிதை என்னும் மூல புத்தகத்திலிருந்து இயற்றியதாக கூறுகிறார் .இன்று வரை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அதன் அடிப்படை அறிய இதுவே சிறந்த புத்தகமாக கருதப்படுகிறது .
இதன் பின் வந்த முக்கியாமான படைப்பு சுஸ்ருத சம்ஹிதை .இதன் காலம் 200-2 BC என்று கணிக்க பட்டுள்ளது .


சுஸ்ருதரே உலக அளவில் இன்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக அறிய படுகிறார் .இவரது சிக்கிச்சை முறைகள் கோட்பாடுகள் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவி தாக்கம் ஏற்படுத்தியது .நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்ற படும் ஹிப்போ கிரேட்ஸ் முன்மொழிந்த 4 humor கோட்பாடு சுஸ்ருதரின் அடிபடையில் வந்தது .


four humor theory என்பது இது தான் , உடலில் நான்கு மூல சக்திகள் உள்ளது அதன் சம நிலை ஆரோகியமாகவும் அதன் ஏற்ற தாழ்வுகள் நோயாகவும் வெளிபடுகின்றன .ஹிப்போ கிரேட்ஸ் சொன்ன நான்கு ஹுமோர் -black bile,yellow bile, phlegm and blood.இன்று வரை நாம் சகஜமாக அறியும் வாதம் ,பித்தம் , கபம் ஆகியவை மூன்று தோஷங்கள் என்று ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளில் விளக்கப்பட்டுள்ளது .சரகரும் இதே தான் சொன்னார் , அவருக்கு பின் வந்த சுஸ்ருதரே முதல் முறையாக நான்கு தோஷ கோட்பாடுகளை சொன்னார் .சரகர் சொன்ன மூன்றை விட ரக்தம் எனும் நான்காவது தோஷத்தை சேர்த்தார் .இதுவே தான் ஹிப்போ கிரேட்ஸ் வழங்கிய கோட்பாடுகள் ஆகும் .
மேலும் தெரிந்துகொள்வோம்....

9 comments:

  1. சித்தர்களின் மருத்தவக் குறிப்புகளை சங்கதத்தில்(sanskrit) எழுதிவிட்டால் அது ஆயுர்வேதமா?வேதம் என்பதே வியாசரால் தொகுக்கப்பட்டதே,அவரால் எழுதப்பட்டது அல்ல.சங்கதத்தில் இருக்கும் அனைத்தும் பிற மொழிகளிலிருந்து தொகுக்கப்பட்டதுதான்.
    அய்யர்வேதத்தின்.....சாரி.. ஆயுர் வேதத்தின் அப்பன் ஆத்தா எல்லாமே சித்தமருத்துவமே.
    நீங்கள் எழுதவேண்டியது சித்தமருத்துவத்தைப் பற்றிதான் ...அதன் மொழிபெயர்ப்பான அதைப் பற்றியல்ல...

    ReplyDelete
  2. சுனில் நிஜமாகவே பெருமளவில் எழுத்துப் பிழைகளை குறைத்துள்ளீர்கள். சில சந்திப்பிழைகள் உள்ளன அவற்றிக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எழுத்துப்பிழைகளை குறைத்தாலே சந்திப்பிழைகளையும் எளிதாக குறைத்து விடலாம்.

    இதை நீங்கள் பல முறை டிராப்ட் செய்வதன் மூலம் வெகுவாக குறைக்கலாம். இதுவே உங்களை மேலும் தவறின்றி எழுதத்தூண்டும்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. நல்ல ஆரம்பம் டாக்டர்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்.

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  4. நல்ல ஆரம்பம். தொடர்ந்து எழுதி அசத்துங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கிரியார் வருகைக்கும் , உங்களது யோசனைகளுக்கும் மிக்க நன்றி , நீங்கள் கூறிய drafting method உண்மையிலயே எனக்கு நன்கு உபயோகப்படுகிறது ,

    RVS sir,chitra madam, வருகைக்கு,ஊக்கத்திற்கு நன்றி:)

    ReplyDelete
  6. ராவணன் அவர்களுக்கு
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கலாம் , பண்டைய காலத்தில் அகத்திய முனிவர் இயற்றியதாக ஆயுள் வேதம் எனும் படைப்பை பற்றி பரவலாக அறியப்படுகிறது .ஆயுர்வேதம் அதன் தழுவலாகவோ அல்லது மொழி மாற்றமாகவோ இருக்கலாம்.தற்பொழுதைய கால கட்டத்தில் பல கட்ட ஆய்வுகள் மூலம் சித்த மருத்துவத்தின் தொன்மையை நிறுவும் முயற்சிகள் நடைபெறுகின்றன .ஆனால் அவை எதுவும் இன்னும் முழு வடிவை பெறவில்லை .எனது தனிப்பட்ட கருதும் சித்த மருத்துவம் இன்று கிட்டும் ஆயுர்வேத மருத்துவத்தின் படைப்புக்களை காட்டிலும் தொன்மை வாய்ந்ததே .வள்ளுவர் வாத ,பித்த ,கபங்களை பற்றி குறளில் விளக்கி இருக்கிறார் , எனது நோக்கம் இது பழையது,இது தான் சிறந்தது என்று நிறுவுவது அல்ல , மொழிகளை கடந்து இந்த அமைப்பின் அடிப்படையை கூறுவதே ஆகும் .வேதம் எனும் சொல் அறிதல் என்பதையே குறிக்கும். பண்டைய காலத்து படைப்புகள் எவையுமே தனி ஒரு மனித முயற்சி அல்ல , எல்லாமே அப்பொழுது வழக்கில் இருந்த விஷயங்களின் தொகுப்பே , எது சிறந்தது ,பழையது என்பது எல்லாம் சர்ச்சைக்கு தான் உதவும் , சர்ச்சைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்த, புரிந்த ,ஆராய்ந்த விஷயங்களை இங்கே பகிர்கிறேன்.நன்றி .

    ReplyDelete
  7. சுவாரஸ்யமாய் தொடங்கியிருக்கிறீர்கள் டாக்டர். மேலும் எழுதுங்கள்.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி மோகன்ஜி:)

    ReplyDelete
  9. நல்ல பயன் உள்ள தகவல் நன்றி

    ReplyDelete